Monday, April 22, 2013

திருப்பதிக்கு 16கோடி ரூபாய் காணிக்கை வழங்கிய இந்தியர்

திருப்பதிக்கு 16கோடி ரூபாய் காணிக்கை வழங்கிய இந்தியர்


பணக்கார கோவிலாக பிரகாசிக்கும் வெங்கடேஸ்வரா கோவிலுக்கு, இப்போது வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் 16 கோடி ரூபாய் காணிக்கை வழங்கியுள்ளார்.
திருப்பதி திருமலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோடிக்கணக்கில் நகை மற்றும் பணத்தை காணிக்கையாக வழங்குகின்றனர்.

இவ்வாறு அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் எம்.ராமலிங்க ராஜு, ரூ.16 கோடிக்கான வரைவோலையை திருமலை- திருப்பதி தேவஸ்தான தலைவர் கே.பாபிராஜு நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜு ஆகியோரிடம் வழங்கினார்.

அந்தத் தொகையில் 11 கோடி ரூபாயில் சுவாமிக்கு 35 கிலோ தங்கத்தினால் சகஸ்ர நாம மாலை செய்ய வேண்டும் என்றும், மீதி 5 கோடி ரூபாயை, திருச்சானூர் அருகே பக்தர்களுக்காக அன்னதான கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ராமலிங்க ராஜு கேட்டுக்கொண்டார். வெளிநாடு வாழ் பக்தர்கள் அளித்த காணிக்கையில், இதுதான் அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!