Sunday, April 21, 2013

சிரியாவில் யுத்தம் புரியும் போராளி இயக்கத்துக்கு அமெரிக்கா $123 மில்லியன் நிதியுதவி!


சிரியாவில் யுத்தம் புரியும் போராளி இயக்கத்துக்கு அமெரிக்கா $123 மில்லியன் நிதியுதவி!



சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி இயக்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப் போவதாக அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஒரு நாட்டுக்கு எதிராக உள்நாட்டில் யுத்தம் புரியும் போராளி இயக்கத்துக்கு அமெரிக்காவின் வெளிப்படையான நிதியுதவி அறிவித்தல், ஆச்சரியமானது.

தற்போது 123 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் எனவும், விரைவில் இந்தத் தொகை இரு மடங்கு ஆக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

“இந்த பணம், யுத்தம் புரிவதற்கான ஆயுதங்களாக வழங்கப்பட மாட்டாது” என அறிவித்துள்ள அமெரிக்கா, ஆனால், யுத்தத்தின்போது பயன்படுத்தப்படும் பொருட்கள் நிதியுதவியில் அடங்குகின்றன.

உடல் கவசங்கள் (body armor), இரவுத் தாக்குதல்களின் போது இருளில் பார்க்கக்கூடிய கருவிகள் (night vision goggles), தகவல் தொடர்பு சாதனங்கள், மற்றும் கவச வாகனங்கள் (armored vehicles) ஆகியவற்றை போராளி இயக்கத்துக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.

அதே நேரத்தில், சிரியாவில் உள்ள போராளி இயக்கங்களுக்கு அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., ‘சுற்றுப் பாதையில்’ ஆயுதங்கள் வழங்கியதாக ஒரு தகவலும் உண்டு.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!