Friday, March 22, 2013

ஏவுகணை குறித்து எச்சரிக்கும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது அமெரிக்கா

ஏவுகணை குறித்து எச்சரிக்கும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது அமெரிக்கா


 உலகின் எந்த பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கைகோளை அமெரிக்கா விண்ணில் செலுத்தியுள்ளது.
உலகின் வல்லரசு நாடுகளும், வடகொரியா  உள்ளிட்ட சில நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளன.

இந்நிலையில் இந்த ஏவுகணைகளை எப்போது ஏவினாலும் அதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்யும் செயற்கை கோளை அமெரிக்கா தயாரித்துள்ளது.

“ஜியோ-2” என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், அமெரிக்காவின் புளோரிடா பகுதியிலுள்ள கேப் கெனவரெல் ஏவுதளத்தில் இருந்து அட்லஸ்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அகசிவப்பு கதிர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் இந்த செயற்கைக்கோள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் எதிரி நாட்டு மீது ஏவுகணை ஏவப்பட்டால் உடனடியாக அது குறித்து அமெரிக்காவுக்கு முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கும்.

ஏற்கனவே ஜியோ-1 என்ற பெயரில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெற்றிகரமாக செயல்படவில்லை என்றாலும் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் குறித்த தகவல்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!