Monday, February 18, 2013

ஐ.ஐ.பி.எம். வெப்சைட்டுகளை 9 மணி நேரம் முடக்கி வைத்த ஹேக்கர்ஸ்!


ஐ.ஐ.பி.எம். வெப்சைட்டுகளை 9 மணி நேரம் முடக்கி வைத்த ஹேக்கர்ஸ்!


பிரபலமான கல்வி நிறுவனமான ஐ.ஐ.பி.எம்.-ன் பிரதான வெப்சைட்டுகள் பலவற்றையும் 9 மணி நேரமாக ஹேக்கர்ஸ் முடக்கி வைத்திருந்திருக்கின்றனர்.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பிளானிங் அண்ட் மானேஜ்மென்ட் என்ற ஐஐபிஎம் கல்வி குழுமத்தை நடத்தி வருபவர் அரிந்தம் சவுத்ரி. இவர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் தமது ஐஐபிஎம் நிறுவனத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட சுமார் 78 வெப்சைட்டுகளை முடக்க ராஜஸ்தான் மாநிலம் குவாலியர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று 78 வெப்சைட்டுகளை முடக்க மத்திய தொலைத் தொடர்புத் துறையும் உத்தரவிட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவெனில், அரிந்தம் சவுத்ரியின் ஐஐபிஎம், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்ல.. பட்டங்களை வழங்கக் கூடிய அதிகாரம் இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த யூசிஜியின் இணையப் பக்கமும் கூட முடக்கப்பட்டது.

இதேபோல் நிறைய வசதிகள் இருக்கிறது என்று பொய்யான தகவல்களைப் பரப்பி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் அரிந்தம் சவுத்ரி என்று விமர்சனம் வெளியிட்ட முன்னனி ஊடகங்களின் வெப்சைட்டுகளும் கூட முடக்கத்துக்குள்ளாகின.

இது ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மறுநாள் சனிக்கிழமையன்று திடீரென்று ஐ.ஐ.பி.எம். குழுமத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுகளான www.iipm.in, www.iipm.edu ஆகியவற்றை ஹேக்கர்ஸ் முடக்கி வைத்துவிட்டனர். இந்த வெப்சைட்டுகளை சுமார் 9 மணி நேரம் 'ஆஃப்லைனுக்கு கொண்டு போய் வைத்திருந்த ஹேக்கர்ஸ் பின்னர் விடுவித்திருக்கின்றனர்.

அரிந்தம் சவுத்ரி விவகாரம்தான் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காகவும் ஓடிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!