Tuesday, February 19, 2013

மூன்று வயது குழந்தையின் அபார சாதனை...

மூன்று வயது குழந்தையின் அபார சாதனை... இயக்குநர் பிரபு சாலமன் பாராட்டு!



ஒரே நிமிடத்தில் 83 அறிவியல் கண்டுபிடிப்பாளர் பெயரைச் சொல்லியும், 3.20 நிமிடங்களில் உலக வரைபடப் புதிருக்கு விடைகண்டும், புதிய சாதனை படைத்துள்ளான் 3 வயது சிறுவன்.

சென்னை கேகே நகரைச் சேர்ந்த கல்யாண் குமார் - லீலா வந்தினி தம்பதியின் மகன் கேஎல் தீரஜ். வயது 3 ஆண்டுகள் 7 மாதம்தான் ஆகிறது. ஆனால் அபார நினைவாற்றல்.

அந்த நினைவாற்றலை சாதனையாக்கும் முயற்சியில் இறங்கினர் பெற்றோர். இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு தீரஜ்ஜின் நினைவாற்றலை பரிசோதிக்கும் விதத்தில், மேடை அமைத்துக் கொடுத்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தினான் தீரஜ். ஒரே நிமிடத்தில் 83 அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒப்பித்து முதல் சாதனையை நிகழ்த்தினார்.

அடுத்து 3 நிமிடங்கள் 20 நொடியில் உலக வரைபட புதிருக்கு விடை கண்டுபிடித்தான். இதற்கு முன் இந்தப் புதிரை 4.39 நிமிடங்களில் அவிழ்த்ததே சாதனையாக இருந்தது. இதன் மூலம் உலக வரைபடப் புதிருக்கு மிக மிகக் குறைந்த நேரத்தில் விடைகண்ட சாதனை தீரஜ்ஜுக்கு கிடைத்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு, 2.9 வயதிலிருந்தபோது, மிகக் குறைந்த (2.19 நிமிடங்களில்) நேரத்தில் 215 நாடுகளின் கொடிகளை ஒப்பித்து சாதனை படைத்திருக்கிறான் சிறுவன் தீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் தீரஜ் சாதனையை இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் ராஜன், ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!