Thursday, February 21, 2013

பிள்ளைகளை வாயில் வைத்து வளர்க்கும் ஆண் மீன் !

பிள்ளைகளை வாயில் வைத்து வளர்க்கும் ஆண் மீன் !



மிருகங்கள் ஆனாலும் சரி, பாலூட்டிகள் என்றாலும் சரி, பொதுவாக பெண் இனம் தாம் பிள்ளைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் இங்கே பார்க்கும் ஒருவகையான மீன் இனம் சற்று வித்தியாசமானது. பெண் முட்டை இட்டவுடன் தொடக்கமே, ஆண் மீன் அது பொரிக்கும்வரை பாதுகாக்கிறது. அதில் இருந்து வெளிப்படுக் குஞ்சுகள் உடனடியாகவே ஆண் மீன்(அப்பா) வாயுக்குள் சென்றுவிடுகிறது. அப்படி அது செல்ல மறுத்தால் கூட அப்பா மீன் அதன் குஞ்சுகள் அனைத்தையும் வாயுக்குள் எடுத்துவிடுகிறது. பல நாட்களாக இக் குஞ்சுகளை அது பாதுகாக்கிறது. அப்பாவின் வாயுக்குள் இருப்பதையே இயற்கையாக இக் குஞ்சு மீன்களும் விரும்புகிறது. அவை ஒரு பருவத்துக்கு வரும் வரை ஆண் மீன் தான் தனது வாயுக்குள் வைத்து தனது குஞ்சுகளைப் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கிறது என்றால் பாருங்களேன்.

சிலவேளைகள் மட்டும், அவற்றை வெளியே நீந்த விடுகிறது அப்பா மீன். ஆனால் பின்னர் சிறிது நேரத்தில் அவை அனைத்தையும் தனது வாயுக்குள் எடுத்துவிடுகிறது. இதேபோல தற்சமயம் இந்த மீன் குஞ்சுகள் வெளியே நீந்தினாலும், ஒரு ஆபத்து என்றால் உடனே ஓடி வந்து அப்பாவின் வாயுக்குள் புகுந்துவிடுகிறது. யார் சொன்னது அம்மாவால் தான் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்று ? இம் மீன் சவால் விடுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!