Tuesday, January 8, 2013

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்: மலேசிய வக்கீல்கள் சங்கம் ஆதரவு


பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கு மலேசிய வக்கீல்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மலேசிய வக்கீல்கள் சங்கத்தலைவர் லிம் சீவி கூறுகையில், அடிக்கடி பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை வழங்கலாம்.

ஆனால் இந்த முறையில் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த முறை மூலம் காமவெறியர்களிடம் இருந்து மக்களை காக்க முடிவது மட்டுமின்றி, குற்றவாளியும் தண்டிக்கப்படுவார். இதற்கு முன்பு குற்றவாளிகளின் ஒப்புதலை பெறலாம் என்றார்.

அவாம் என்ற பெண்கள் அமைப்பின் தலைவர் ஹோ யோக் லின் கூறுகையில், இந்த தண்டனை மிகவும் கொடூரமானது, இயற்கைக்கு மாறானது.

இதன் மூலம் இத்தகைய குற்றங்களை தடுத்து விட முடியாது. பெண்கள் சமத்துவம், உரிமைகளை மேம்படுத்துவதன் மூலமே இதுபோன்ற குற்றங்களை வேறோடு அழிக்க முடியும் என்றார்.

ஆசிய நாடுகளில் முதல்முறையாக தென் கொரியாவில் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யவும், 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் ஜேர்மனி, டென்மார்க், சுவீடன், போலந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஆகிய இடங்களில் பல ஆண்டுகளாக இதுபோன்ற தண்டனை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!