Thursday, January 10, 2013

விடுதலை குறித்து சபையில் பேசிய அமைச்சர்!

ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தெரியாமல், விடுதலை குறித்து இன்று சபையில் பேசிய அமைச்சர்!


ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தெரியாமல் பாராளுமன்றம் இன்று பகல் 1 மணியளவில் கூடியபோது, ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அவரது விடுதலை குறித்து அரச தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா, ரிசானாவை விடுதலை செய்ய சவூதி அரசிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதென குறிப்பிட்டார்.

ஆனால் அமைச்சர் இவ்வாறு பதிலளிக்கும் வேளையில் ரிசானா நபீக்கிற்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அதன் பின்னரே மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றில் ரிசானாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவங்க எல்லாம் நல்லா வருவாய்ங்கஅய்யா இதை படிக்கிறவங்க ஏதாவது கமெண்ட்ஸ் போடுங்கப்பா .... 


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!