Tuesday, January 8, 2013

செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு

செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு

மார்ஸ் எனப்படும் செந்நிற கிரகமான செவ்வாய் கிரகத்தில் சிறு நகரம் அமைக்க முடிவு செய்துள்ளார் பேபால் நிறுவனரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான எலான் முஸ்க்.

இந்த நகரத்தில் 80000 பேரை குடியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அசைவப் பிரியர்களுக்கு அங்கு இடமில்லை. சைவர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிறார் முஸ்க்.

அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம் நிகழும் என்றும் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் எலான் முஸ்க் தெரிவித்துள்ளார்.

செந்நிற கோள் செவ்வாய் 

 
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளை சுற்றி சிவப்பாக காணப்படுவதால் இது 'செவ்வாய்' என அழைப்படுகிறது.
 


 

 உயிரினங்கள் வாழத் தகுதி


செவ்வாய் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண் டன. பின்னர் 1965-ஆம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தனர். பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதி வாய்ந்த கிரகம் என்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.



ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்


செவ்வாய் கிரகத்தில் சிறிய நகரம் அமைக்க ஸ்பேஸ் எக்ஸ், பேபால் நிறுவனரான எலான் முஸ்க் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச்சென்று சாதனை படைத்தது இவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.



சைவர்களுக்கு மட்டும் அனுமதி


இந்த குடியேற்றம் பற்றி லண்டன் ராயல் ஏரோநாட்டிகல் சொசைட்டியில் பேசிய முஸ்க், செவ்வாய்கிரகத்தில் சைவ உணவுப் பிரியர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றார். அங்கு முதலில் குடியேறுவோர், தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.



கட்டணம் எவ்வளவு?


செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிகளவில் இப்பயணத்துக்கு முன்வர வேண்டும் என்பதற்காக கட்டணத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்கிறார் எலான் முஸ்க்.



செவ்வாயில் விவசாயம்


செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும்.



விண்வெளி பயணம்


செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. அதோடு, விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் "பால்கன்-9' விண்கலத்தை நாசா தயாரித்து வருகிறது.






No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!