Tuesday, January 8, 2013

செல்போனுடன் சிறைக்குள் ஊடுருவிய பூனை

செல்போனுடன் சிறைக்குள் ஊடுருவிய பூனை: கையும் களவுமாக பிடிபட்டது (வீடியோ இணைப்பு)



பிரேசில் சிறைக்குள் ஆக்ஸா பிளேடு மற்றும் செல்போன்களுடன் பதுங்கி பதுங்கி சென்ற பூனையை பொலிசார் சிறை பிடித்தனர்.
பிரேசிலின் அலகோஸ் நகரில் உள்ள அராபிராகா என்ற சிறையில் 263 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சிறையில் கடந்த புத்தாண்டு அன்று வெள்ளை சாம்பல் நிறம் கலந்த பூனை ஒன்று பிரதான நுழைவு வாயில் வழியாக புகுந்தது.

பூனைதானே என்பதால் பொலிசார் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பூனை வித்தியாசமாக இருப்பதை பார்த்த ஒருவர் அதன் அருகில் சென்று ஆய்வு செய்தார்.


அப்போது பூனை உடலில் டேப் சுற்றி இருந்ததால், சந்தேகப்பட்டு பூனையை பிடித்தனர். டேப்பை கழற்றிய போது, பூனை உடலில் சுவரை துளை போடும் டிரில், மெமரி கார்டு, ஆக்ஸா பிளேடு, செல்போன், பற்றரிகள் இருந்ததை பார்த்து பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவற்றை கைப்பற்றி பூனையை கூண்டுக்குள் அடைத்தனர். பின்னர் விலங்குகள் நோய் தடுப்பு மையத்துக்கு அனுப்பினர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், செல்போன் உள்பட பொருட்களை வைத்து பூனையை சிறைக்குள் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில் பூனை பேசாது பாருங்கள் என்று கேலியாக கூறினார்.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!