Wednesday, January 9, 2013

ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!


ஸ்ரீபெரும்புதூர்: நோக்கியா நிறுவனம் ரூ.3,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்தே வருமானவரித் துறையினர் அந்த நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையிலும் சென்னை அலுவலகத்திலும் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்துக்கு சென்னையையடுத்து ஸ்ரீபெரும்புதூரில் மாபெரும் தொழிற்சாலை உள்ளது.

நேற்று இந்த ஆலையிலும் சென்னை அலுவலகத்திலும் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்தது.

2006ம் ஆண்டு துவங்கப்பட்ட சென்னை தொழிற்சாலையில் 8,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 70 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். உலகிலேயே மிக அதிக அளவில் நோக்கியா செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-12ம் நிதியாண்டில் நோக்கியா இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ. 12,000 கோடியாக இருந்தது. ஆனால், தனது தாய் நிறுவனமான பின்லாந்தில் உள்ள நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை தொழிற்சாலை ராயல்டி தொகை செலுத்தியபோது, அதற்கான வரியை பிடித்தம் செய்யவில்லை என்று தெரிகிறது.

இந்த வகையில் ரூ. 3,000 கோடி வரை நோக்கியா வரி ஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே வருமான வரித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!