புத்தாண்டு கொண்டாட்டம்: கோடிகளில் குளிக்கும் பாலிவுட் நடிகைகள்!
புத்தாண்டு வந்தாலே ஸ்டார் ஹோட்டல்களிலும், மால்களிலும் பார்ட்டி, நடனம் என களை கட்டும். 2012 டிசம்பர் 31ம் நாள் இரவு மிகப்பெரிய ஹோட்டல்களில் நடைபெறும் பார்ட்டிக்கு பாலிவுட், கோலிவுட் நடிகைகளின் நடனம் இடம் பெறுவது வழக்கம்.இதற்காக போட்டிப்போட்டுக்கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை கொட்டிக்கொடுத்து புக் செய்து வருகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதவிதமான உணவுகள் மட்டுமல்லாது சுவையான உற்சாகபானமும் பரிமாறப்படும். இதோடு நடிகைகளின் கலக்கலான நடனமும் இடம்பெறும். இந்த பார்ட்டிகளில் பங்கேற்க வருபவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன ஹோட்டல்கள். ஒருநாள் இரவுதானே உற்சாகமாய் கொண்டாடலாம் என்று கட்டணத்தைப் பற்றிக் கவலைப் படாமல் பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
புத்தாண்டு பார்ட்டியை ஒட்டி பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன் என பலரும் கோடி கோடியாய் பணமழையில் குளிக்கின்றனர். மல்லிகா ஷெராவத் இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். சமீரா ரெட்டிக்கு 50 லட்சம் கொடுத்திருக்கின்றனராம். எந்த நடிகை என்ன சம்பளம் வாங்குகிறார் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
லண்டனில் கரீனா கபூர்
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பார்ட்டியில் இரண்டு முக்கிய ஹீரோயின்களை புக் செய்வதில் போட்டியே நடைபெறும். கத்ரீனா கைப், கரீனா கபூர்தான் அந்த சூப்பர் ஸ்டாரினிகள். இந்த ஆண்டு கரீனா கபூர் திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் இந்த ஆண்டு அவர் புத்தாண்டு பார்ட்டியில் பங்கேற்கவில்லை மாறாக கணவன் சயீப் அலிகானுடன் டிசம்பர் 31ம் தேதி லண்டனில் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
மல்லிகாவுக்கு ரூ. 2 கோடி சம்பளம்
பாலிவுட் கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்திற்கு புத்தாண்டு பார்ட்டிக்கு ரூ.2 கோடி சம்பளம் தர ஹோட்டல்கள் ஒத்துக்கொண்டுள்ளன. மும்பை ஜூஹூ கடற்கரையில் அமைந்துள்ள ஸ்டார் ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்கும் மல்லிகா ஷெராவத் கொலைவெறி பாட்டுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஒரு கோடி நாயகிகள்
இந்த ஆண்டு புத்தாண்டு பார்ட்டிக்கு பிபாஷா பாசு, கங்கனா ரணவத் ஆகியோருக்கு தலா ஒரு கோடி ரூபாய் சம்பளமாக தர ஸ்டார் ஹோட்டல்கள் ஒத்துக்கொண்டுள்ளனவாம்.
சன்னி லியோன் கலக்கல்
கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் இந்த ஆண்டு புத்தாண்டு இரவு டெல்லியில் நடனமாட ரூ.1 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். மும்பையில் 5 நிமிடம் ஒரு நடனத்தில் பங்கேற்க 26 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிராச்சி தேசாய் சம்பளம் ரூ.51 லட்சம்
நடிகை பிராச்சி தேசாய், மும்பை கிளப் ஒன்றில் நடனமாடுகிறார். அதற்காக ரூ.51 லட்சம் சம்பளமாக பெறுகிறார். பிரபல போஜ்புரி நடிகை ஸ்வேதா, டேராடூனில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியில் நடனமாடுகிறார். இதற்காக அவருக்கு ரூ.48 லட்சம் வழங்கப்பட உள்ளது.
சமீராவின் சம்பளம் ரூ. 50 லட்சம்
பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் சமீரா ரெட்டிக்கு 10 நிமிடம் புத்தாண்டு பார்ட்டியில் பங்கேற்க ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். லக்னோ நகரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் இந்த ஆண்டு சமீரா ரெட்டி நடனமாட உள்ளார்.
பரினிதி சோப்ராவுக்கு ரூ. 10 லட்சம்
பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையான பரினிதி சோப்ரா, நடிகர் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து லோனாவாலாவில் நடனமாடுகிறார்.இதற்காக ரூ.10 லட்சம் அவருக்கு சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்








No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!