Tuesday, December 18, 2012

இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -வானிலை மையம்

இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -வானிலை மையம்



வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலுவிழந்திருந்தாலும் கூட தொடர்ந்து அதே இடத்தில் இருப்பதால் 2 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் பருவ மழை மீண்டும் பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால் பெரிய மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இருப்பினும், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை, தமிழகம் மற்றும் ஆந்திராவை யொட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழைபெய்யும்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும். நாளை (வியாழக்கிழமை) படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!