Monday, December 17, 2012

கலர் கலரா' படம் பார்த்தீங்கன்னா நீங்க கஜினி ஆயிருவீங்க

'கலர் கலரா' படம் பார்த்தீங்கன்னா நீங்க 'கஜினி' ஆயிருவீங்க!

 
அதிக அளவில் ஆபாசப் படம் பார்ப்பவரா நீங்கள்... அப்படியானால் உடனே அதை மாத்திக்குங்க, இல்லாட்டி நீங்க கஜினி ஆயிருவீங்க.. அதாவது உங்க ஞாபக சக்தி முற்றிலும் பறி போய் விடுமாம்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.

இன்டர்நெட்டில் அளவுக்கு அதிகமாக ஆபாசப் படம் பார்ப்பது, கதை படிப்பது உள்ளிட்டவற்றில் தொடர்ந்து ஈடுபடும்போது அப்படிப் பார்ப்பவர்களின் மூளையில் ஞாபக சக்தி தொடர்பான பகுதி பாதிக்கப்பட்டு ஞாபக சக்தி சுத்தமாக காலியாகி விடுமாம். அவர்களுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அதாவது கஜினி படத்தில் சூர்யாவுக்கு வருமே ஒரு ஞாபக மறதி அந்தப் பிரச்சினை வந்து விடுமாம்.

மூளையில் தகவல்களை சேகரித்து வைக்கும் பகுதி குறித்த ஆய்வின்போதுதான் இந்த விவரத்தை தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பான ஆய்வில் 28 ஆண்களை ஈடுபடுத்தினர். அவர்களிடம் செக்ஸ் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. கம்ப்யூட்டரில் படங்களும் போட்டுக் காட்டப்பட்டன. செக்ஸ் அல்லாத விஷயங்களும் அவர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டன.

இதில் ஆபாசப் படம் பார்த்தவர்களுக்குத்தான் மூளையின் தகவல் பகுதியில் மாற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது. மற்ற விஷயங்களைப் பார்த்தபோது அந்தப் பகுதியில் எந்தவிதமான சலனமும் ஏற்படவில்லை. மேலும் செக்ஸ் மற்றும் செக்ஸ் அல்லாத விஷயங்கள் குறித்து அவர்களிடம் பல்வேறு காட்சிகளும், கேள்விகளும் கேட்கப்பட்டன.

இதில் இன்டர்நெட்டில் காட்டப்பட்ட ஆபாசப் படங்களால்தான் அதிக அளவில் தகவல் சேகரிக்கும் பகுதி பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

செக்ஸ் உணர்வுகளும், எழுச்சி உணர்வுகளும், மூளையின் சிந்தனைத் திறன் தொடர்பான பகுதியை கடுமையாக பாதிக்கிறது. இதனால் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் உள்ளிட்ட ஞாபக சக்திப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறுகிறார் ஆய்வாளர்களில் ஒருவரான கிறிஸ்டியன் லையர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!