Saturday, September 22, 2012

மோனாலிசாவின் எலும்புக்கூடு எடுக்கப்படுவதை நீங்கள் பார்க்க வேண்டுமா?

மோனாலிசாவின் எலும்புக்கூடு எடுக்கப்படுவதை நீங்கள் பார்க்க வேண்டுமா?




“மோனா லிசாவின் எலும்புக்கூடு கிடைக்கிறது” என்று சொன்னால், ஓவியத்தில் வரையப்பட்டுள்ள மோனா லிசாவே ஒரு கற்பனைப் பாத்திரம் என்று சொல்லி விடுவீர்கள். நாம் கூறவரும் நபர், மோனா லிசா ஓவியத்தை வரைவதற்கு லியார்னாடோ டாவின்ஸிக்கு மாடலாக (அல்லது இன்ஸ்பிரேஷனாக?) இருந்தவர்.

இவரது பெயர், லிசா கெரர்டினி. இவரும் இத்தாலியர்தான்.

இத்தாலி, ஃபுளோரன்ஸ் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள், இந்த மோனாலிசா மாடலின் எலும்புக் கூடுகளை நெருங்கி விட்டதாக நேற்று அறிவித்துள்ளனர்.

கீழேயுள்ள போட்டோவில், லியார்னாடோ டாவின்ஸி வரைந்த மோனா லிசாவின் ஒரிஜினல் உருவத்தை பார்த்துவிட்டு, எலும்புக்கூடு தேடும் போட்டோக்களை காண, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.



ஃபுளோரன்ஸ் நகரில் லிசா கெரர்டினியின் எலும்புக்கூட்டை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வாரம், அதே காலப்பகுதியில் இறந்து போய் புதைக்கப்பட்ட ஒருவருடைய எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

“தற்போது கிடைத்துள்ள எலும்புக்கூடு லிசா கெரர்டினியின் எலும்புக்கூடு அல்ல” என்று குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள், “இந்த எலும்புக்கூட்டுக்கு கீழே லிசாவின் எலும்புக்கூடு கிடைக்கலாம் என்பதற்கு எம்மிடம் சில ஆதாரங்கள் உள்ளன” என்று கூறியுள்ளனர்.

கீழேயுள்ள போட்டோவில், அகழ்வாராய்ச்சியாளர் ஒருவர், எலும்புக்கூடு இருக்கக்கூடிய இடத்தை செக் பண்ணுவதை பார்த்துவிட்டு, அடுத்த போட்டோவுக்கு வரவும்.




இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள National Committee for the Promotion of Historic and Cultural Heritage அமைப்பின் தலைவர் சில்வானோ வின்சிட்டி, இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

இந்த அமைப்பினர் எதற்காக லிசா கெரர்டினியின் எலும்புக்கூட்டை தேடுகின்றனர்? கீழேயுள்ள போட்டோவில், இந்தவாரம் கிடைத்த மற்றொருவரின் எலும்புக்கூட்டை பார்த்துவிட்டு, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.




மோனா லிசா என்று உலகமெங்கும் அறியப்பட்ட ஓவியப் பெண்ணை, La Gioconda என்று இத்தாலியர்கள் அழைக்கின்றனர். La Joconde என்று பிரெஞ்ச்காரர்கள் அழைக்கின்றனர். லியார்னாடோ டாவின்ஸி வரைந்த ஒரிஜினல் மோனா லிசா ஓவியம், பாரீஸில் உள்ள Louvre மியூசியத்தில் உள்ளது.

இந்த ஓவியம் லிசா கெரர்டினியை மாடலாக வைத்து வரையப்பட்டது என்பதை பெரிய சதவீதத்தினர் ஒப்புக்கொண்ட போதிலும், அதை தவறு என்று வாதிடும் ஆட்களும் உள்ளனர்.

கீழேயுள்ள போட்டோவில் உள்ளதுதான், லிசா கெரர்டினியின் உடலை புதைத்த இடம் என்பதுவரை கண்டு பிடித்துள்ளனர். வாருங்கள் இறுதி போட்டோவுக்கு




சில்வானோ வின்சிட்டியின் அமைப்பினர், லிசா கெரர்டினியின் எலும்புக்கூட்டை கண்டெடுத்து, அதன் முகத்தை விஞ்ஞான ரீதியாக பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் ஒரிஜினல் உருவத்துக்கு கொண்டுவந்து, மோனா லிசாவின் உருவத்துடன் ஒப்பிட்டு பார்க்கப் போகிறார்கள். உலக அளவில் சில கோடீஸ்வரர்கள், இந்த ஆராய்ச்சிக்கான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

கீழேயுள்ள போட்டோவில் உள்ளதுதான், அந்த நாட்களில் இத்தாலி, ஃபுளோரன்ஸ் நகரில் பிரபுக்களின் குடும்பத்தினரை புதைத்த கல்லறைகள் இருந்த இடம்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!