Wednesday, September 19, 2012

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்





விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானின் அவதார திருநாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்து அமைப் புகள் சார்பில் பல இடங்களில் விதவிதமான வடிவங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. எல்லா கோயில் களிலும் விநாயகருக்கு விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படையல் போடப்பட்டது.

மக்கள், சிறிய களிமண் பிள்ளையார் சிலைகளை வாங்கிச் சென்று வீடுகளில் அலங்கரித்து வைத்தனர். விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், பழ வகைகளை வைத்து பூஜை செய்தனர். விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9 மணி என்பதால் இந்த நேரத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையிலும் பல இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. லஸ் கார்னரில் உள்ள நவசக்தி விநாயகர் கோயிலில் இன்று காலை கணபதி ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது.

ஸ்நெசப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சந்தக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ தீபாராதனை நடத்தப்பட்டது. வீடுகளில் வைத்து வழிபடும் களிமண் பிள்ளையார் சிலைகளை மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கிணறுகளில் கரைத்து விடுவார்கள். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், 10 நாட்களுக்கு பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!