Friday, September 21, 2012

இராணுவ முகாமிலேயே குழந்தையை பெற்றெடுத்த வீராங்கனை

இராணுவ முகாமிலேயே குழந்தையை பெற்றெடுத்த வீராங்கனை

 



ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் இராணுவத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர், இராணுவ முகாமிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படையில், பிரிட்டன் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்படை பிரிவில் மொத்தமாக 500 பெண்கள் உள்ளனர்.

ஆப்கானின் நேட்டோ இராணுவ முகாமின் ஆயுதப் படைப் பிரிவில் ஆறு மாதங்களுக்கு முன் வந்த, இராணுவ வீராங்கனை ஒருவர் இரு வாரங்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இராணுவ மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில், அப்பெண் 34 வார கர்ப்பிணியாக உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ஐந்து வார குறைப் பிரசவமாக, 18ஆம் திகதி ஆண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்தார்.

இதுகுறித்து பிரிட்டன் இராணுவ செய்தி தொடர்பாளர், தாயும்- சேயும் நலமாக உள்ளனர். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தப் பின், தாயும்- சேயும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவித்தார்.

தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமலே கடினமான பயிற்சியிலும், துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டிருந்த வீராங்கனை ஒருவர் முகாமிலேயே குழந்தை பிரசவித்திருப்பது இதுவே முதல் முறை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!