Thursday, September 20, 2012

3000 வருடங்களுக்கு தேவையான வைரங்கள் கண்டுபிடிப்பு

இன்னும் 3000 வருடங்களுக்கு தேவையான வைரங்கள் சைபீரிய வனப்பகுதியில் கண்டுபிடிப்பு




 




ரஷ்யாவின் சைபீரிய வனப் பகுதியில் இன்னும் 3000 வருடங்களுக்கு உலக சந்தைக்கு வழங்கக் கூடியளவுக்கு ட்ரில்லியன் கேரட் கணக்கான வைரங்களைத் தோண்டி எடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மோதிய விண்கல்லால் 62 மைல் விட்டமுள்ள பள்ளத்தாக்கு ஒன்று ரஷ்யாவின் சைபீரிய வனப் பகுதியில் ஏற்பட்டிருந்தது.

சமீபத்தில் இப் பள்ளத்தாக்கின் அடியில் ஆய்வு மேற்கொண்ட போதே இந்த ஆச்சரியமிக்க விடயம் கண்டுபிடிக்கப்பட்டது.

Popigai Astrblem எனப் பெயரிடப் பட்டுள்ள சைபீரியாவில் உள்ள இப் பகுதியில் கிடைக்கும் வைரங்கள் சாதாரண வைரங்களை விட இரு மடங்கு அதிக கடினமுடையது என்பதுடன் அதி உயர் விஞ்ஞான உபகரணங்களையும் தொழி நுட்பக் கருவிக்ளையும் கொண்டு செதுக்கக் கூடியது.

இப்பள்ளத்தாக்கு 1970 ஆம் ஆண்டிலே கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் மிகவும் கட்டுப்பாடு உடைய உலக சந்தைகளின் கொள்கைகளால் பாதிக்கப் பட்ட சுயநலவாதிகளின் செய்கைகளால் வெளியுலகுக்கு மறைக்கப் பட்டு இரகசியமாக வைக்கப் பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!