Thursday, September 20, 2012

19 வயதில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: உகாண்டா பெண்

19 வயதில் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி: உகாண்டா பெண் சாதனை




உகாண்டாவில் 19 வயது டீன் ஏஜ் பெண், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் ஜனாதிபதியாக இருப்பவர் யோவெரி முசிவெனி.

இந்த ஆண்டு 8 நாடாளுமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 7 இடங்களில் ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் அவரது பலம் குறைந்தது.

இந்நிலையில் உசக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திடீரென காலமானார். இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தம் ஜனாதிபதி முசிவெனிக்கு ஏற்பட்டது.

இந்த தொகுதியை இழந்தால், அரசு பெரும்பான்மையை இழந்து விடும் நிலை இருந்தது. இந்நிலையில், உசக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் பிராஸ்கோவியா ஒரோமைட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர காத்திருக்கிறார் ஒரோமைட். இவருக்கு 19 வயதுதான். இதனால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தேர்தலில் டீன் ஏஜ் பெண் தோல்வி அடைவார். ஜனாதிபதி பதவி இழப்பது உறுதி என்று அரசியல் வல்லுனர்கள் கூறினர்.

ஆனால், இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரோமைட் வெற்றி பெற்றுள்ளார். அனுபவம் இல்லாத சிறு பெண், நாடாளுமன்ற உறுப்பினராக எப்படி செயல்பட போகிறார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் இது வயது பற்றிய பிரச்னை இல்லை. புத்தி சம்பந்தப்பட்டது, எனக்கு தெரியும் என்று ஒரோமைட் அமைதியாக பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!