Wednesday, August 8, 2012

வானில் இன்று அதிசயம் சூரியனை சுற்றி வட்டம் பூமிக்கு பாதிப்பு இல்லை


வானில் இன்று அதிசயம் சூரியனை சுற்றி வட்டம் பூமிக்கு பாதிப்பு இல்லை




வானில் சூரியனை சுற்றி ஒளி வட்டம் நேற்று ஏற்பட்டது. இதனால் பூமிக்கு பாதிப்பு இல்லை என்று பிர்லா கோளரங்க இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

வானில் நேற்று திடீரென்று சூரியனை சுற்றி ஒரு விதமான ஒளி வட்டம் காணப்பட்டது. இதன் வெளிப்பகுதி இளம் பழுப்பு நிறத்திலும், உட்பகுதி சிவப்பு கலந்த பல வண்ணங்களிலும் இருந்தது.

கோவை, திருப்பூர், மதுரை, வேலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வானில் நிகழ்ந்த, இந்த அதிசயத்தை பார்த்து ரசித்தனர். பள்ளிகளில் படித்து கொண்டிருந்த மாணவ, மாணவிகளை வெளியே அழைத்து வந்த ஆசிரியர்கள், சூரியனை சுற்றி காணப்பட்ட ஒளி வட்டத்தை காண்பித்தனர். சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதனால், சென்னை மக்களால் வானில் நிகழ்ந்த அதிசயத்தை காண முடியவில்லை. வானில் திடீரென்று ஏற்பட்ட சூரிய ஒளி வட்டத்தால், பூமிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

இதுகுறித்து பிர்லா கோளரங்கம் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 15 ஆயிரம் கோடி கிமீ தூரம் உள்ளது. தற்போது மழை காலம் ஆரம்பமாகிவிட்டது. ஆங்காங்கே பல்வேறு பகுதி களில் மழையும் பெய்து வருகிறது. அதனால், காற்றில் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது. சூரியனிடம் இருந்து வெளியேறும் வெப்பம், காற்றின் ஈரப்பதத்தில் உள்ள நீர் துளிகள் மீது பட்டு பிரதிபலிக்கிறது.

இதனால், காற்றில் உள்ள நீர் துளிகள் வட்ட வடிவில் சூரியனை சுற்றி காணப்படுகிறது. இதனை சூரிய ஒளி வட்டம் (சன் ஹாலோ) என்கிறோம். இது இயற்கையாகவே அவ்வப்பொழுது நிகழக்கூடியது. இதனால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மழைக் காலங்களில் வானில் அடிக்கடி வானவில் தோன் றும். இதற்கும் காற்றில் உள்ள ஈரப்பதமே காரணம். இவ்வாறு அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!