Thursday, August 9, 2012

நியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறவுள்ள எரிமலை: விஞ்ஞானிகள் எச்சரிக்கை


நியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறவுள்ள எரிமலை: விஞ்ஞானிகள் எச்சரிக்கை




நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த தொன்காரிரோ எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நியூசிலாந்தில் வடக்கு தீவில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள தொன்காரிரோ என்ற எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அந்த எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டதுடன், உள்ளே இருந்து புகையும், சாம்பலும் வெளியேறுகிறது.



எனவே அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அந்த எரிமலையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இன்று அந்த எரிமலையை ஆய்வு செய்த போது, ஒரு வீட்டின் அளவுக்கு 3 துளைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது புகையும், சாம்பலும் வெளியேறுவதால் அப்பகுதியில் உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த எரிமலை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தது குறிப்பிடத்தக்கது

.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!