Thursday, August 9, 2012


அமெரிக்க துப்பாக்கி சூடு: அரைக் கம்பத்தில் தேசியக் கொடியை பறக்க விட உத்தரவு





அமெரிக்காவின் குருத்வாராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேசியக் கொடி வரும் 10ஆம் திகதி வரை அரைக் கம்பத்தில் பறக்கவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கோஸ் நகரில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான, குருத்வாராவில் இனவெறியோடு நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.





உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்காவின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த சீக்கியர்களுக்காக மட்டுமின்றி, மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற உயிர் நீத்த காவல்துறையினருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் அமெரிக்க கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.




Gurdwara Temple Information

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!