Monday, August 6, 2012

வறட்சியை நோக்கி இந்தியா

வறட்சியை நோக்கி இந்தியா




பருவ மழை போதாத காரணத்தால் மூன்று வருடங்களில் இந்தியா முதல் தடவையாக வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசுபிக் சமுத்திரத்தின் ''எல்லினோ தாக்கம்'' காரணமாக செப்டம்பர் மாதத்தில் மழை வீழ்ச்சி சராசரியைவிட மிகவும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை துறைத் தலைவரான ஜெனரல் லக்ஷ்மன் சிங் ராத்தோர் கூறியுள்ளார்.

இந்த எல்லினோ தாக்கந்தான் உலகமெங்கிலும் காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த மழை வீழ்ச்சிக் குறைவு, ஆசியாவின் மூன்றாவது பெரிய இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.
அதனால் பொருளாதார வளர்ச்சி குறைவதுடன், உணவு விலைகளின் விலையும் அதிகரிக்கலாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!