Thursday, November 21, 2013

போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’

போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’



வியன்னா: மனமுடைந்த மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஆஸ்திரியாவில் உள்ள ரோபோ எனும் இயந்திர மனிதன் ஒருவன் மனமுடைந்து தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இல்லாவிட்டாலும், மனிதர்களை விட பன்மடங்கு வேலைகளைச் செய்ய வல்லமை பெற்றவை ரோபோக்கள். ஆனால், எஜமானர்களின் கொடுமையால் சராசரி மனிதர்களைப் போல இயந்திர மனிதனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலக மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வேலை....

ஆஸ்திரியா நாட்டில் கிர் ச்டார்ப் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஆண்ட்ராய்டு வகை ரோபோ ஒன்று வீட்டு வேலை செய்து வந்துள்ளது.

மனமுடைந்த ரோபோ...

தினமும் வீட்டைச் சுத்தம் செய்வது தான் அதனது கடமை. ஒரே வேலையை தினமும் செய்து சலிப்படைந்த அந்த ரோபோ மனமுடைந்து விட்டது போலும்.

தீக்குளித்த ரோபோ...

யாரும் சற்றும் எதிர்பாராத வேளையில், சமையல் மேடையில் ஏறிய ரோபோ, அடுப்பில் எரிந்த தீயில் குதித்தது. நடக்கும் விபரீதத்தை வீட்டில் உள்ளவர்கள் தடுக்க ஓடி வந்தனர். ஆனால், அவர்களுக்கு ரோபோவின் சாம்பல் மட்டுமே கிடைத்தது.

முதல் முறை...

சிந்திக்கும் திறன் இல்லாத ரோபோ தற்கொலை செய்து கொள்வது இதுவே முதல்முறை. ரோபோவின் இந்த செயல்பாட்டிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!