Wednesday, October 23, 2013

சிரியா போர்: கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் சிசுவைக் கொல்லும் கொடூர ‘சிகரெட் போட்டி’

சிரியா போர்: கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் சிசுவைக் கொல்லும் கொடூர ‘சிகரெட் போட்டி’ 




சிரியப் போரில் கருவில் இருக்கும் குழந்தையைச் சுட்டால் சிகரெட் பரிசு என கொடூரப்போட்டி அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து மருத்துவர் ஒருவர். 

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சிரியாவில், அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. இதன் விளைவாக அதிபர் ஆதரவு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டு போர் 3-வது ஆண்டாக நீடித்து வருகிறது.இந்த நிலையில் சமீபத்தில் தலைநகர் டமாஸ்கஸ்சின் புறநகர்ப்பகுதிகளில் அதிபர் ஆதரவு படையினர் பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுத தாக்குதல்களை நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் என 1300-க்கும் மேற்பட்டோர் துடிதுடிக்க உயிரிழந்தனர். 

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக போர் நடக்கும் பகுதிகளில் மருத்துவராக பணி புரிந்து வரும் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் நாட் என்ற மருத்துவர் அந்நாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் சிரியாவில் கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது...

தாக்குதலுக்கு ஆளான கர்ப்பிணிகள்... 
சிரியாவில் போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக பலியாகின்றனர். நான் இதுவரை 20 ஆண்டுகள் போர் நடக்கும் பகுதிகளில் மருத்துவராக பணியாற்றியுள்ளேன். ஆனால், இங்குதான் கர்ப்பிணி பெண்களை தாக்கி கொலை செய்வதை பார்க்கிறேன்.

சிகரெட் போட்டி.... 
மறைந்திருந்து தாக்கும் சிலர் அவர்களது பயிற்சிக்காக அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் சுடுகின்றனர். இதில் மிக கொடூரமாக இருந்தது என்னவென்றால் கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசுவை சுட்டு கொல்பவர்களுக்கு சிகரெட்டுகள் வழங்கப்படும் போட்டியும் நடைபெறுகிறது.

நிறைமாத கர்ப்பிணிகள்... 
ஒரு நாள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட இரண்டு நிறைமாத கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை துப்பாகியால் சுடப்பட்டு, அவர்களின் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தன.

நரகத்தை விடக் கொடிது.... 
இந்த கொடுமையை எவ்வாறு விவரிப்பது என்ற எனக்கு தெரியவில்லை. இது நரகத்தில் ஏற்படும் துயரத்தைவிடவும் கொடியது' எனத் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு... 
தற்போது லண்டன் திரும்பியிருக்கும் டேவிட், ‘சிரியாவில் தேவையான மருத்துவ உதவிகள் மக்களை சென்றடைவதில்லை' எனக் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : அவர் இதை செய்தது யார் என்பதை குறிப்பிடவில்லை ஆயினும் சண்டை பிடிக்கும் இரு சற்றும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். சிறந்த அறிவுரைகள் கூறும் இந்த மதத்தில் பிறந்த இவர்கள் போன்றோரின் செயல்களினால் முழு மதமும் அவமானப்படுகின்றது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!