Tuesday, October 22, 2013

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்!!!

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்!!! 




உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் பழங்களில் முதன்மையானது தான் ஆப்பிள். ஏனெனில் ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்கள் கூட தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அத்தகைய ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பதிலாக தீமையைத் தான் விளைவிக்கும். 

எப்போதும் பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற முடியும். அதிலும் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அப்போது அதில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் இருப்பதால், ஆப்பிள் ஜூஸை அதிகம் பருகி வந்தால், நீரிழிவு மற்றும் பற்சிதைவு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக ஆப்பிளை அரைத்து, அதனை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகினால் தான் மிகவும் ஆபத்தானது. இப்போது ஆப்பிள் ஜூஸை பருகினால் விளையும் தீமைகள் என்னவென்று பார்ப்போமா!!! 

இதயத்திற்கு ஆபத்து 

ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இது உடலில் பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அதாவது கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை தினமும் உட்கொண்டால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஆர்செனிக் 

ஆப்பிள் ஜூஸில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக் என்னும் பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

எடை அதிகரிப்பு 

ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மேலும் ஊட்டச்சத்து நிபுணர்களும், ஆப்பிள் ஜூஸை தினமும் பருகிப் பாருங்கள், உடல் எடை அதிகரிப்பதை நன்கு காணலாம் என்று சொல்கின்றனர்.

அதிகப்படியான கார்போஹைட்ரேட் 

ஆப்பிள் ஜூஸில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதனை அதிகம் உட்கொண்டால், இதயத்திற்கு எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நீரிழிவு 

ஆப்பிள் ஜூஸ் போடும் போது, அதில் செயற்கை இனிப்பான சர்க்கரையை பயன்படுத்தினால், அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவுக்கு வழிவகுக்கும்.

நார்ச்சத்து இல்லாதது 

பொதுவாக ஆப்பிளில் புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், முக்கியமாக நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் சுத்தமாக நார்ச்சத்து இருக்காது.

பற்களில் பிரச்சனை 

ஆப்பிள் ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

பதப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஜூஸ் 

பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸில் அதிகப்படியான இரசாயங்கள் சேர்ப்பதால், அது உடலின் ஆரோக்கியத்தை இன்னும் அதிகம் பாதிக்கும். எனவே கடைகளில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

குறிப்பு 

ஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், ஆப்பிளை ஜூஸ், ஸ்மூத்தி என்று செய்து குடிக்காமல், அதனை அப்படியே சாப்பிடுங்கள். மேலும் நிபுணர்களும் இதனையே பரிந்துரைக்கிறார்கள்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!