Tuesday, October 22, 2013

விண்வெளியில் உருவான ‘கழிவுப்பொருள் டைனோசர்’... நவம்பரில் பூமிக்கு வருகிறது

விண்வெளியில் உருவான ‘கழிவுப்பொருள் டைனோசர்’... நவம்பரில் பூமிக்கு வருகிறது 




அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் இருந்தபடியே அழகிய டைனோசர் பொம்மை ஒன்றை தனது மகனுக்காக உருவாக்கியுள்ளார்.

பொதுவாக தாயுள்ளம் என்பது எதைப் பார்த்தாலும், அதைத் தன் குழந்தைக்கு கொடுத்தால் அது விரும்புமா என்ற சிந்தனையிலேயே இருக்கும் என்பது உண்மை. அது உணவானாலும் சரி, விளையாட்டுப் பொருளானாலும் சரி.

இந்த உணர்வு சராசர் பெண்ணிற்கும் சரி, விண்வெளி வீரரானாலும் சரி ஒன்று தான் என்பதை நிரூபித்துள்ளது இந்தச் சம்பவம்.

விண்வெளி வீராங்கனை.... 

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேரன் நைபர்க். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி ஆராய்ச்சி செய்து வருகிறார்.


டைனோசர்.... 

கேரன் விண்வெளியில் இருந்தாலும், பூமி திரும்பும் போது தன் குழந்தைக்கு எதையாவது தர வேண்டும் என விரும்பியுள்ளார். அதன்படி, அங்கு தன் கைகளுக்குக் கிடைத்த கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி டைனோசர் பொம்மை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

ஸ்பேஸ் ஜங்.... 

விண்வெளிக் கழிவுகளில் உருவான முதல் பொம்மை என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த டைனோசர் ‘ஸ்பேஸ் ஜங்' எனப்படும் பொருட்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.

துணிப்பொம்மை... 

ரஷிய உணவு கொள்கலன்களில் ஒட்டப்பட்டு வரும் கொக்கி பட்டைத் துணி ( வெல்க்ரோ) மாதிரியான துணி வகையைக் கொண்டு இந்த டைனோசரை உருவாக்கியிருக்கிறார் கேரன். பொம்மையின் உள்ளே பயன் படுத்திய பழைய டி-சர்ட்டின் கிழிசல்களை அடைத்துள்ளாராம்.


பிளஸ்சி.... 

இந்த டைனோசர் பொம்மைக்கு பிளஸ்சி எனப் பெயரிட்டுள்ளார் கேரன்.

விண்வெளிப்பரிசு... 

வருகிற நவம்பர் மாதம் பூமி திரும்பும் போது இந்த டைனோசர் பொம்மையை தனது 3 வயது மகன் ஜாக்குக்கு கொடுக்கத் தீர்மானித்துள்ளாராம் கேரன்.

விண்வெளிக் குளியல்.... 

விண்வெளியில் இருந்தபடியே தலையை ஷாம்பு போட்டு அலசுவது எப்படி என செய்து காட்டினாரே அந்த கேரன் தான் தற்போது டைனோசர் பொம்மை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!