Thursday, October 24, 2013

அமெரிக்க பூங்காவில் இருந்து ரூ.37 லட்சம் வைர கல்லை கண்டெடுத்த 14 வயது சிறுமி

அமெரிக்க பூங்காவில் இருந்து ரூ.37 லட்சம் வைர கல்லை கண்டெடுத்த 14 வயது சிறுமி 


அமெரிக்காவில் உள்ள பார்க் ஒன்றில் ரூ. 36 லட்சத்து 92 ஆயிரத்து 504 மதிப்புள்ள 3.85 காரட் வைரக் கல்லை 14 வயது சிறுமி ஒருவர் கண்டெடுத்துள்ளார். 

அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனா கிளைமர் தனது குடும்பத்தாருடன் கடந்த சனிக்கிழமை அர்கன்சாஸில் உள்ள டைமண்ட்ஸ் ஸ்டேட் பார்க்கிற்கு சென்றார். வைரங்கள் புதைந்து கிடக்கும் அந்த பார்க்கை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் கண்டெடுக்கும் வைரத்தை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என்ற பாலிசியும் உள்ளது. 

இந்நிலையில் அந்த பார்க்கில் சுமார் 2 மணிநேரமாக வைரத்தை தேடி சுற்றிய தனாவின் முயற்சி இறுதியில் வெற்றி பெற்றது. அவர் ரூ.36 லட்சத்து 92 ஆயிரத்து 504 மதிப்புள்ள 3.85 காரட் வைரக் கல்லை கண்டெடுத்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், 

முதலில் ஏதோ சாக்லேட் பேப்பர் என்று நினைத்தேன். அதை தொட்டபோது அது மார்பிள் என்று நினைத்தேன். ஆனால் அது வைரம் என்றார். 

37 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பார்க்கில் இருந்து இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 400 வைரக் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. தனா தான் எடுத்த வைரத்தை மோதிரமாக செய்து போடுவாராம் இல்லை என்றால் அதை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் கல்விச் செலவுகளை கவனித்துக் கொள்வாராம்.


http://www.craterofdiamondsstatepark.com/digging-for-diamonds/default.aspx#Carat

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!