Wednesday, June 6, 2012

இரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவுபார்த்த விமானம் 




சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லல், சந்திரனை ஆய்வு செய்தல், செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிடல் ஆகிய பணிகளுக்காக விண்ணில் ஏவப்படும் விண்கலங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் டிஸ்கவரி, என்டேவர், மற்றும் ரஷ்யாவின் சோயுஷ் ஆகிய விண்கலங்களைக் கூறலாம்.


இவ் விமானம் முக்கியமாக சீனாவின் டியாங்கொங் நகரில் சமீபத்தில் அமைக்கப் பட்ட புதிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக மாட்டிக் கொள்ளாமல் அவதானிக்கவே உருவாக்கப் பட்டது. எனினும் இதன் மூலம் வடகொரியா, ஈரான், இராக், பாகிஸ்தான் மற்றும் ஆஃபகானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள அணு உலைகள் மற்றும் இராணுவப் பாசறைகள் வாகனங்கள் என்பவற்றையும் அவதானிக்கவும் இவ் விமானம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் எனவும் நம்பப் படுகின்றது.அமெரிக்காவின் இவ்விமானம், விண்ணில் ஆராட்சி என்ற பெயரில் ஏவப்பட்டது. மனிதர்கள் இல்லாமல் முற்றாக ரிமோட்டில் இயங்கக்கூடிய இவ்விமானம் சுமார் 29 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டது. பல நாடுகளின் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு இவ்விமானம் விரைவில் தரையிறங்கவுள்ளது. குறிப்பாக பூமியில் உள்ள ஏனைய நாடுகளை வேவுபார்ப்பது என்பது அமெரிக்காவுக்கு கடுமையான விடையம். குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மேல் அமெரிக்க உளவு விமானத்தால் பறப்பில் ஈடுபட முடியாது. அந் நாடுகளின் ராடர்களில் மண்ணைத்தூவவேண்டி இருக்கும். ஆனால் பூமியில் இருந்து சுமார் 500 கி.மீட்டர் தொலைவில்(விண்வெளியில்) இருந்தவாறே இந்த வேவு விமானம் தான் சேகரிக்கவேண்டிய தகவல்களை சேகரிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆனால் ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக, வேவு பணிக்காக ஒரு விண்கலம் இயங்கி வருகின்றது என்றால் நம்பமுடியுமா ? அப்படியான ஒரு விண்கலம் அல்லது உளவு விமானம் போயிங் நிறுவனத்தினது X-37B 2 எனப் பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்று 17 000 mph வேகத்தில் பூமியை 110 - 500 மைல் உயரத்தில் 270 நாட்களாக சுற்றி வந்தது. இது இம்மாதம் (ஜூன்) கடைசியில் தரையிறக்கப் படவுள்ளது என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!