Wednesday, March 6, 2013

அரிய வகை பச்சை நிற மரகத புறா மீட்பு

அரிய வகை பச்சை நிற மரகத புறா மீட்பு






களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் மான், மிளா போன்ற விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவதும், அவற்றை வனத் துறையினர் மீட்டு வருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுபோல வனப்பகுதியில் இருந்து பறந்து வந்த அரியவகை இனமான பச்சை மரகத புறா ஒன்று களக்காடு, ஐந்துகிராமம் பகுதியில் வட்டமிட்டு வந்தது. இதை நோட்டமிட்ட வில்லேந்திரன் என்ற பறவை, மரகத புறாவை தாக்கியது. இதையடுத்து அந்த புறா, அங்குள்ள டேவிட் என்பவரது வீட்டு தோட்டத்தில் விழுந்து, காயங்களுடன் பறக்க முடியாமல் தவித்தது.

இதைக்கண்ட டேவிட், மரகத புறாவை மீட்டு, களக்காடு புலிகள் காப்பக ரேஞ்சர் மணிமாறனிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் அரிய வகை புறாவிற்கு சிகிச்சை அளித்து, அதனை தலையணை வனப்பகுதிக்கு கொண்டு சென்று பறக்கவிட்டனர். இதுகுறித்து ரேஞ்சர் மணிமாறன் கூறுகையில், ‘மரகத புறா அரிய வகை இனம். மிக வேகமாக அழிந்து வரும் இனமாகும். எனவே அரசு இதனை பாதுகாக்க மாநில புறாவாக அறிவித்துள்ளது. இந்த வகை புறாக்கள் மிகவும் அடர்ந்த, குளுமையான பகுதிகளில் மட்டுமே வசிக்கும். இரை தேடி வந்தபோது ஊருக்குள் வந்திருக்கலாம்’ என்றார். அரிய வகை புறாவை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!