Monday, March 4, 2013

எரிவாயு குழாய் பதிப்பு விவகாரம் ஒரு பிடி மண்ணைகூட விட்டு தரமாட்டோம்

எரிவாயு குழாய் பதிப்பு விவகாரம் ஒரு பிடி மண்ணைகூட விட்டு தரமாட்டோம்


கொச்சி , பெங்களூர் காஸ் பைப் லைன் அமைக்கும் பணியை தொடங்கிய மத்திய அரசின் கெயில் நிறுவனத்துக்கு எதிராக விவசாய நிலங்களை பாதுகாக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பெண் விவசாயிகளும் ஆவேசமாக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
கெயில் நிறுவனம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 7 மாவட்டங்களில் சுமார் 310 கிமீ தூரத்துக்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கியது. விளைநிலங்களில் புல்டோசர் மூலம் பயிர்கள் வேருடன் அழித்து அப்புறப்படுத்தப்பட்டன. ஆண்டாண்டு காலமாக இருந்த தென்னை மரங்கள் வேருடன் பிடுங்கி எரியப்பட்டது. பெற்ற குழந்தைகளைப்போல வளர்த்த பயிர்கள் அழிவதை கண்டு மனம் பொறுக்காத விவசாயிகள் கதறினர். சாமான்ய மக்களால் அரசு எந்திரத்தை தடுக்க முடியவில்லை. ஒரு சில விவசாயிகள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, ஈரோடு மாவட்டம் சிறுகளஞ்சி பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிக்கு 27ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது.

தமிழக அரசும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தது. வரும் 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் கருத்து கேட்கப்படுகிறது. காஸ் குழாயை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்வதை தவிர்த்து மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதுகுறித்து தற்சார்பு விவசாய சங்கத்தின் பொறுப்பாளர் பொன்னையன் கூறியதாவது:

எரிவாயுக்குழாய் விளைநிலத்தில் பதிப் பால் கடும் விளைவுகள் ஏற்படும். முதலாவதாக பிஎம்பி சட்டம் 1962 திருத்த விதி 2012 படி விவசாயிகளை விசாரணையின்றி 10 ஆண்டுகள் சிறைவைக்கும் அடக்குமுறையாகவே இதை விவசாயிகள் கருதுகின்றனர். அப்பாவி விவசாயிகளுக்கு இந்த கொடூர சட்டம் பற்றி விளக்கிக் கூறப்படவோ அதன் மீது அவர்கள் சம்மதம் பெறப்படவோ இல்லை. இது பற்றி அரசு அதிகாரிகளிடம் கேட்டால், சட்டம் இருப்பது உண்மை, ஆனால் வழக்குப் போடமாட்டோம்‘ என பதில் கூறுகின்றனர். வழக்கு போடுவதில்லை என்றால் சட்டத்தை திரும்பப்பெற வேண்டியதுதானே என்பதுதான் எங்கள் வாதம். விளைநிலங்களில் 5 அடி அகலத்திற்கு தான் குழாய் போடுகிறோம், எவ்வித பாதிப்பும் இல்லை என்கிறார்கள். இது ஏமாற்றும் வேலை. ஒரு முழு நிலத்தில் நடுவில் 60 அடி அகலம் கையகப்படுத்துகின்றனர். இந்தப் பகுதிக்குள் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகள், நீர்ப்பாசன அமைப்புகள், சொட்டுநீர் பாசன அமைப்புகள் அழிக்கப்படுகின்றன.

கெயில் நிறுவனம் இதை மறைத்து பொய் கூறுகிறது. நிலப் பயன்பாட்டு உரிமை சட்டத்தின் கீழ் எடுக்கின்றோம் என்கிறார்கள். இதன் பொருள் என்ன? நில உரிமை விவசாயியிடம் இருக்கும். ஆனால் நிலத்தின் பயன்பாட்டு உரிமை கெயில் நிறுவனத்திடம் இருக்கும். இது அப்பட்டமான மோசடி. மாற்றுவழிகள் இருந்தும் அதை செய்யாமல் பெருநிறுவனங்கள் எங்கள் நிலங்களை பறிக்கும் செயல் சந்தேகப்பட வைக்கிறது. இவ்வாறு பொன்னையன் கூறினார். விவசாயி சுதா: நாங்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு சொல்லவில்லை. இத்திட்டத்தை மாற்று பாதையில் கொண்டு செல்லுங்கள், விவசாய பூமிக்குள் வேண்டாம் என்று தான் செல்லுகிறோம். இதே திட்டம் கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக தான் கொண்டு செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் விவசாய பூமியில் கொண்டு செல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த விதமான நோட்டீசும் கொடுக்காமல் எங்கள் பூமிக்குள் ஏன் வருகிறார்கள்? போலீசை வைத்து எங்களை மிரட்டி அவசர அவசரமாக வேலை செய்கிறார்கள். இதை எதிர்த்து ஏற்கனவே நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இதில் கோர்ட் பிறப்பித்த உத்தரவை கெயில் நிறுவனம் பொருட்படுத்தவில்லை. விவசாய பூமியில்தான் குழாய் பதிப்போம் என பிடிவாதம் பிடித்தால் நாங்கள் அத்தனை பேரும் அவர்கள் வெட்டிய குழியில் பிணமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும். இப்போது எங்கேயோ இருந்து வந்த கெயில் நிறுவனம் அரசாங்கத்திற்கு முக்கியமாகி விட்டது, இங்கேயே வாழ்கின்ற நாங்கள் முக்கியமில்லையா? எங்களுக்கு பணமோ, காசோலையோ தேவையில்லை. நாங்கள் பிறந்து வளர்ந்த பூமியே எங்களுக்கு போதும். சிறு பிடி மண்ணும் விட்டுக் கொடுக்கமாட்டோம். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம். இதுவே விவசாயிகளான எங்கள் இறுதி முடிவு. ஆக்ரோஷமாக கூறினார் சுதா. விவசாயி வசந்தாமணி: ஆலாம்பாளையத்தில் எனக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அந்த விளைநிலத்தை நம்பித்தான் இவர்களைப் படிக்க வைத்துள்ளேன். இதற்கிடையே என் விளைநிலத்தில் காஸ் பைப் லைன் பதிக்கும் பணியை 500 போலீசாருடன் வந்து தொடங்கினார்கள். இதை தடுக்க முயன்றபோது எனது தலைமுடியை பிடித்து முட்புதரில் தள்ளினர். ‘நாங்கள் வாழ்வதற்காக எங்கள் நிலத்தை விட்டுவிடுங்கள், இல்லையென்றால் என்னையும் குடும்பத்தாரையும் இந்த மண்ணிலேயே புதைத்து விடுங்கள்‘ என்று சொன்னேன். அதை கண்டுகொள்ளாமல் என்னை மறுபடியும்  போலீசார் கீழே தள்ளி

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!