Monday, March 4, 2013

புத்தம் புதுப் பொலிவில் பேஸ்புக்கின் நியூஸ் பீட்

புத்தம் புதுப் பொலிவில் பேஸ்புக்கின் நியூஸ் பீட்




பேஸ்புக் முகம் மாறுகிறது.. அதாவது அதாவது அதன் நியூஸ்பீட் புதுப் பொலிவு பெறுகிறது. இந்த வாரம் புதிய பொலிவுடன் கூடிய நியூஸ் பீடை அறிமுகப்படுத்துகிறது பேஸ்புக். கிட்டத்தட்ட 1 கோடிப் பேரை உறுப்பினர்களாகக் கொண்ட பேஸ்புக், தனது நியூஸ் பீடில் பல புதிய விஷயங்களைச் சேர்த்து மேலும் கவர்ச்சிகரமாக்கியுள்ளது.

மார்ச் 7ம் தேதி பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைப் பீடமான கலிபோர்னியாவில், மென்லோ பார்க்கில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி மாதம்தான் தனது சர்ச் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் இப்போது நியூஸ் பீடை அறிமுகப்படுத்துகிறது. இதுதான் பேஸ்புக்கின் இந்த ஆண்டின் 2வது பெரிய நிகழ்ச்சியாகும்.

நியூஸ்பீட் குறித்து பேஸ்புக்கின் அதிபரான மார்க் ஸுகர்பெர்க் கூறுகையில், பேஸ்புக்கைப் பொறுத்தவரை சர்ச், யூசர் புரபைல் ஆகியவற்றுக்கு அடுத்து முக்கியமானது இந்த நியூஸ் பீட்தான். எனவே இதை மூன்றாவது முக்கியத் தூண் என்று கூட சொல்லலாம் என்றார் அவர்.

அடுத்து மொபைல் போனில் பேஸ்புக்கை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் இறங்கப் போகிறதாம். தற்போது மொபைல் பேஸ்புக்கில் சில அம்சங்கள் சரியாக செயல்படுவதில்லை என்ற குறை உள்ளது. அதை அடுத்து சரி செய்யப் போகிறது பேஸ்புக்.

உலகிலேயே அதிகஅளவில் ஷேர்கள் செய்யப்படுவது பேஸ்புக்கில்தான் என்பது நினைவிருக்கலாம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!