Wednesday, January 2, 2013

தாய்லாந்தில் புத்த மடாலயங்கள் மூடல்

தாய்லாந்தில் புத்த மடாலயங்கள் மூடல்


தாய்லாந்தில் புத்தபிட்சுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதால், மடாலயங்கள் மூடப்பட்டுள்ளன.
புத்த மதம் தழைத்தோங்கி காணப்பட்ட சயாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில், புத்த துறவிகள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தனர்.

பிரச்னைகளை தீர்ப்பதில் பஞ்சாயத்து தலைவர் போலவும், திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளுக்கு சடங்கு செய்பவர்களாகவும் இவர்கள் வலம் வந்தனர்.

புத்த துறவிகள் மது அருந்துகின்றனர், நீல படங்கள் பார்க்கின்றனர், பெண்களோடு தொடர்பு வைத்து கொள்கின்றனர் என்பது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளியானதால் புத்த துறவிகள் மீதான மதிப்பு குறைந்து விட்டது.

முன்பெல்லாம் நிறைய பேர் புத்த மடாலயங்களில் சேர்ந்து, பயிற்சி பெற்று புத்த மத குருவாக மாறி விடுவர். இப்போது யாரும் மடாலயங்களுக்கு சென்று பயிற்சி பெற விரும்புவதில்லை.

இளைஞர்கள் யாரும் புத்த மடாலயங்களுக்கு பயிற்சி பெற வராததால் வயதான துறவிகள் தான், இப்போது மடாலயங்களை பராமரித்து வருகின்றனர். இதனால் பல மடாலயங்கள் புத்த பிட்சுகள் இல்லாமல் மூடப்பட்டு விட்டன.

இந்நிலையில் அண்டை நாடான மியான்மரில் புத்த மடாலயங்களில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். எனவே அங்கிருந்து இளம் புத்த பிட்சுகளை வரவழைக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!