Friday, January 4, 2013

ட்விட்டரின் மதிப்பு 11 பில்லியன் டாலர்! பேஸ்புக் பங்குகள் விழுந்ததால் ஜிவ்!!

ட்விட்டரின் மதிப்பு 11 பில்லியன் டாலர்! பேஸ்புக் பங்குகள் விழுந்ததால் ஜிவ்!!


ட்விட்டர் நிறுவனர்கள், Evan Williams, Jack Dorsey, Biz Stone, நிறுவனத்தின் சான்பிரான்சிஸ்கோ தலைமையகத்தில்…


சமூக வலைத்தளம் ட்விட்டர் அடுத்த ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது, அதன் மதிப்பு 11 பில்லியன் டாலராக இருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. நியூயார்க்கில் இருந்து செயல்படும் நிதி ஆய்வு நிறுவனம் கிரீன்கிரெஸ்ட், இந்தக் கணிப்பை நேற்று வெளியிட்டது.

கிரீன்கிரெஸ்ட் நிதி ஆய்வு நிறுவன ஆய்வாளர் மேக்ஸ் வொல்ஃப், “பேஸ்புக் பங்குச் சந்தைக்குள் போனபோது, ட்விட்டரின் மதிப்பு பெறுமதி குறைந்தது. ஆனால், பேஸ்புக் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்த காரணத்தால், ட்விட்டர் மதிப்பு பெறுமதி அதிகரித்துள்ளது” என்றார். ட்விட்டர், அடுத்த ஆண்டு நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என தெரிகிறது.

இந்த பெறுமதி அதிகரிப்புக்கான மற்றொரு காரணம், ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரை வாங்கப் போகின்றது என்று வர்த்தக வட்டாரங்களில் அடிபட்டுக்கொண்டுள்ள ஒரு வதந்தி. அது வதந்தியல்ல, நிஜமாகவே திரை மறைவில் பேச்சுக்கள் நடக்கின்றன என செய்தி வெளியிட்டிருந்தது, வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை.

பேஸ்புக் பரபரப்பாக பங்குச் சந்தைக்குள் வந்தபோது இருந்த IPOவை (Initial Public Offering) விட, தற்போது அதன் பங்குகள் 26% சரிந்துள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!