Thursday, January 3, 2013

டில்லி அரசின் அடுத்த அதிரடி! தண்ணீர் புடிக்கவும் கட்டணம், குடிக்கவும் கட்டணம்!!

டில்லி அரசின் அடுத்த அதிரடி! தண்ணீர் புடிக்கவும் கட்டணம், குடிக்கவும் கட்டணம்!!


ஏக் கிளாஸ் பானி கித்னா பைசா சாப்?

அதிரடிக்கு பேர்போன மத்திய அரசு, அடுத்த அதிரடிக்கு ரெடி! தண்ணீருக்கு விலை நிர்ணயிக்க வேண்டும். தண்ணீரை வர்த்தகப் பொருளாக கருத வேண்டும்; விவசாயத்துக்கு நிலத்தடி நீரை மானிய விலையில் வழங்கலாம் என்ற அதிரடிகளை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

தேசிய நீர் வள கவுன்சில் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய நீர் சட்ட வரைவு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட வரைவில் விவசாயிகளுக்கு பாதகமான பல அம்சங்கள் உள்ளன.

எதற்காக இந்த தேசிய நீர் சட்டம்? மத்திய அரசு கூறும் காரணம்:

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகள் உபயோகிக்கும் தண்ணீரின் தேவை உயர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமை. அதனால் தேசிய நீர் வளக் கொள்கை, அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த தண்ணீர் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:

-தண்ணீரை பாது காக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் என்ற ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த ஆணையம் தண்ணீருக்கு கட்டணம் விதிக்க வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

-இந்த கட்டண விகிதம் ஆண்டுதோறும் மாற்றப்பட வேண்டும். நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுதல் வேண்டும்.

-அந்தந்த பகுதிகளில் ‘தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைப்பினர், பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அவரவர் எல்லைக்குள் தண்ணீர் வழங்கும் முகமையாக இவர்கள் செயல்பட வேண்டும்.

இந்த சட்ட முன் வடிவுகள் சட்டமானால் நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் பணம் கட்ட வேண்டும் என்பது மட்டுமல்ல, தண்ணீர் விநியோகம் தனியார் மயமாகும். இந்த முடிவு விவசாயிகளுக்கு பலத்த அடி என்றும் சொல்லலாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!