Friday, January 4, 2013

மருந்துகளுடன் வாழும் இலங்கையர்கள்: ஆய்வில் தகவல்

மருந்துகளுடன் வாழும் இலங்கையர்கள்: ஆய்வில் தகவல்


இலங்கையில் 90 வீதமான மக்கள் நாளாந்தம் ஏதேனும் ஒரு மருந்தை பயன்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் பல்வேறு வகையான மருந்துகளை எந்தவித மருத்துவ ஆலோசனையும் இன்றி கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது என்றும், பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் மாதம் தோறும் 45-50 மில்லியன் ரூபா பெறுமதியான பரசிற்றமோல் வில்லைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!