Wednesday, January 2, 2013

புத்தாண்டில் தமிழகம் சாதனை: 12 லட்சம் பாட்டில் பீர்! மொத்த டாஸ்மாக் விற்பனை 95 கோடி!!

புத்தாண்டில் தமிழகம் சாதனை: 12 லட்சம் பாட்டில் பீர்! மொத்த டாஸ்மாக் விற்பனை 95 கோடி!!



தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகளில் புத்தாண்டுக்கு முன்தினம், விற்பனை உச்சத்துக்கு சென்றது என தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டுக்கு முன்தினம், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால், மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகள் 180,000 பெட்டிகள் (கேஸ்) விற்பனையாகி உள்ளன. பீர் வகைகள் ஒரு லட்சம் பெட்டிகள் விற்றுள்ளன. ஆக மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் மதுபான பாட்டில்கள் கொண்ட பெட்டிகள் விற்பனையாகி இருக்கின்றன. பீர் மட்டும் 12 லட்சம் பாட்டில்கள் விற்று தீர்ந்துள்ளன.

புத்தாண்டுக்கு முன்தினம், ஒரேநாளில் விற்றுத் தீர்ந்த மொத்த மது பாட்டில்களின் மதிப்பு ரூ.95 கோடி. பீர் மட்டும் ரூ.11 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.84 கோடிக்கும் விற்பனையாகின. கடந்த புத்தாண்டு முந்தைய நாளில் ரூ.75 கோடிக்கு மட்டுமே மதுபானம் விற்பனையானது.

புத்தாண்டு அன்று (நேற்று) சுமார் ரூ.80 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த புத்தாண்டின் முதல் நாள் விற்பனை ரூ.20 கோடி அதிகம் என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார்.

அடுத்த ஆண்டு விற்பனை தினத்துக்கு 100 கோடிக்கு மேல் சென்று சரித்திரம் படைக்கும்!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!