Wednesday, January 2, 2013

ஏழு நாட்களில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா?

ஏழு நாட்களில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா?


உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான படிகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.

குறைவான உணவு

உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்கான உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

சாதாரணமான நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

உடற்பயிற்சி

உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 30-45 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் நன்கு சிக்கென்று விரைவில் மாறிவிடும்.

சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன்

இது உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3-4 முறை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.

உப்பு

உப்பை அதிகமாக சாப்பிட்டால், உடலில் தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல், அதனை குறைப்பதோடு, செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.

தண்ணீர் உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் இறுதியானவை, தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!