Wednesday, December 12, 2012

700 கிமீ பாயும் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

700 கிமீ பாயும் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி



அணு ஆயுதங்களுடன் 700 கிமீ பாயும் அக்னி 1 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.அணு ஆயுதங்களுடன் தரையில் இருந்து புறப்பட்டு 700 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 1 ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள், 12 டன் எடையும், 15 மீட்டர் நீளமும், 1000 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் கொண்டவை.

ஒடிசா மாநிலம் வீலர் தீவில் உள்ள சோதனை தளத்தில் இன்று அக்னி 1 ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அக்னி 1  ஏவுகணை கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி இதே தளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!