Tuesday, December 11, 2012

ஜப்பான் விஞ்ஞானிகள் சொல்கின்றனர் குழந்தைகள் பீர் குடித்தால் சளித் தொல்லை வராதாம்

ஜப்பான் விஞ்ஞானிகள் சொல்கின்றனர் குழந்தைகள் பீர் குடித்தால் சளித் தொல்லை வராதாம்


குளிர் காலத்தில் ஏற்படும் சளித் தொல்லை போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பீர் கொடுக்கலாம் என்று ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறதா? ஆம். பீரில் உள்ள ஒரு வகை மூலப்பொருள் நோயை தடுக்கிறது என்று ஜப்பானை சேர்ந்த சபோரா மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சப்போரோ புரூவரீஸ் நிறுவனம் இந்த ஆராய்ச்சிக்கு தேவையான நிதியை செலவிட்டுள்ளது. அந்த நிறுவன ஆய்வாளர் ஜுன் புஜிமோடோ கூறியது:

தாவர வகையிலிருந்து தயாரிக்கப்படும் பீர் பானத்தில் Ôஹுமுலோன்Õ என்ற முக்கிய மூலப்பொருள் உள்ளது. பீரின் கசப்பு சுவைக்கு இதுதான் காரணம். இது சிறுவர்களுக்கு ஏற்படும் நிமோனியா, மார்புச்சளி போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படுகிறது. ஆர்எஸ் வைரஸ் (ரெஸ்பிரேட்டரி சின்சைடியல் வைரஸ்) என்ற ஒரு வகை வைரஸ்தான் கடுமையான நிமோனியா, சுவாச பிரச்னைகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகின்றன. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை. இந்த வைரஸை ''ஹுமுலோன்'' கட்டுப்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த வகை வைரஸ் குளிர்காலத்தில் அதிகமாக பரவி பெரியவர்களுக்கும் கூட சளி பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பீர் பானத்தில் மிகக் குறைந்த அளவிலேயே ''ஹுமுலோன்'' உள்ளது. ஒருவர் 30 கேன் பீர் குடித்தால்தான் இந்த வைரஸை எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே, இந்த ''ஹுமுலோன்'' மூலப்பொருளை உணவுப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால் கலக்காத பொருட்கள் மூலம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதன் கசப்பு சுவையை குழந்தைகள் ஏற்க செய்வதும் சவாலாக உள்ளது. தீக்காயத்தை தணிக்கும் வல்லமையும் ''ஹுமுலோன்'' மூலப் பொருளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புஜிமோடோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!