Thursday, December 13, 2012

உலக சினிமாவில் முதன் முறையாக புதிய முயற்சியாக உருவாகும் "ஒன்"

உலக சினிமாவில் முதன் முறையாக புதிய முயற்சியாக உருவாகும் "ஒன்"



கொலிவுட்டில் வெங்காயம் என்ற வித்தியாசமான படத்தை இயக்கியதன் மூலம் பாராட்டு பெற்றவர் சங்ககிரி ராஜ்குமார்.
இவர், தனது அடுத்த படத்திற்காக முற்றிலும் புதுமையான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

உலக சினிமாவிலே இதுவரை யாரும் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட்டதில்லை என்றும் அவர் நம்பிக்கையோடு கூறுகிறார்.

"ஒன்" என்னும் பெயரிலான அந்த படத்தை முழுக்க முழுக்க அவர் மட்டுமே உருவாக்கியிருக்கிறார்.

உதவியாளர் என்று கூட வேறு ஒருவரை நாடாமல் மற்ற துறைகளுக்கும் வேறு யாரையும் பணிக்கு வைத்து கொள்ளாமல் இயக்கம் முதல் நடிப்பு வரை எடிட்டிங் முதல் டப்பிங் வரை அனைத்து துறைகளையும் அவரே கையாண்டிருக்கிறார்.

இப்படி நம்பமுடியாமல் ஒரு திரைப்படத்திற்கான எல்லா வேலைகளை அவர் ஒருவரே மேற்கொண்டிருக்கிறார்.

படத்தில் 300க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கின்றன என்று சொல்லும் ராஜ்குமார் அனைத்து பாத்திரங்களிலும் கிராபிக்ஸ் உதவியோடு தானே தோன்றுவதாக கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், ஆங்கிலத்தில் உருவாகும் இந்த படம் தற்போதே ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் முன்னோட்டத்தை அமெரிக்காவில் திரையிட அழைத்துள்ளார்.

இப்படத்தின் 80 சத‌வீத பணிகள் முடிந்து விட்டன‌ என்றும் விரைவில் எல்லா வேலைகளும் முடிந்து சர்வதேச அளவில் "ஒன்" திரைப்படம் வெளியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!