Monday, October 8, 2012

இன்று அதிகாலை ராக்கெட், வானில் வெடித்து சிதறி அட்லான்டிக் கடலில் வீழ்ந்தது!

TOP News :இன்று அதிகாலை ராக்கெட், வானில் வெடித்து சிதறி அட்லான்டிக் கடலில் வீழ்ந்தது!




மனிதர்கள் பயணம் செய்யாத தனியார் ராக்கெட் ஒன்றும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கார்கோ காப்சியூல் ஒன்றும் இன்று அதிகாலை வானில் வெடித்துச் சிதறியுள்ளன.  அமெரிக்கா, கேப் கேனவேரல் பகுதியில் இருந்து கிளம்பிச் சென்ற இந்த ராக்கெட், அமெரிக்க விண்வெளி சப்ளை லைனுக்காக பொருட்களை கொண்டு சென்றது.

விண்வெளியில் உள்ள சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் (International Space Station) ஒன்றில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தது. இந்த சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன், 15 நாடுகளின் கூட்டு செயல்பாடு. இங்கு பணிபுரிபவர்களுக்கு, இந்த 15 நாடுகளும், மாறிமாறி பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.

அமெரிக்கா பொருட்களை அனுப்பி வைக்க இதுவரை நாசா ஸ்பேஸ் ஷட்டில்களை (space shuttle) உபயோகித்து வந்தது. நாசா ஸ்பேஸ் ஷட்டில்கள் ஓய்வு பெற்றபின், இந்த சப்ளை ரூட்டுக்காக அமெரிக்கா தனியார் நிறுவனங்களை உபயோகிக்கிறது.

தற்போது வெடித்துச் சிதறியுள்ள ராக்கெட், ஃபால்கன்-9 ரக ராக்கெட். 48 மீட்டர் உயரமான இந்த ராக்கெட், SpaceX என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்கள், ட்ராகன் கார்கோ கேப்சியூல் (Dragon cargo capsule) ஒன்றில் லோட் செய்யப்பட்டிருந்தன.

ராக்கெட் வெடித்ததுடன், அதனுடன் இணைக்கப்பட்ட கார்கோ கேப்சியூலும் சேர்ந்தே வெடித்து சிதறியது.


Space Exploration Technologies என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஃபால்கன் 9 ரக ராக்கெட், Cape Canaveral Air Force Stationல் இருந்து இன்று காலை 0035 GMT நேரத்தில் ஏவப்பட்டது. காலநிலையில் எந்த கோளாறும் இல்லாத வகையில், வானம் தெளிவாக இருந்தது.

ஏவப்பட்ட இடத்தில் இருந்து கிழக்கு நோக்கி மேலே பறந்து, பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் உள்ள சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனை அடைவதற்கான பிளையிங் பாத், ராக்கெட்டில் செட் பண்ணப்பட்டிருந்தது. ஆனால், புறப்பட்டு சிறிது நேரத்திலேயே ராக்கெட் வெடித்து சிதறியதை, தரையில் இருந்து பார்க்க கூடியதாக இருந்தது.


இந்த நிறுவனத்தின் இதே ரக ராக்கெட், இதுவரை 4 தடவைகள் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சிக்கல் ஏதுமின்றி பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது. இன்று ஏவப்பட்ட ராக்கெட் வெடிக்காமல் சென்றிருந்தால், புதன் கிழமை காலை சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனை சென்றடைந்திருக்க வேண்டும்.

15 நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன், 100 பில்லியன் டாலர் செலவில் உருவானது. SpaceX என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ராக்கெட், 9 ஆக்சிஜின், மற்றும் கெராசின் சக்தியால் இயங்கக்கூடியது.


சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு பொருட்களை கொண்டுசெல்ல டென்டர்கள் கோரப்பட்டபோது, SpaceX நிறுவனமும், போட்டியிட்டது. நாசாவால் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை 12 தடவைகள் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்லும் கான்ட்ராக்ட், 1.6 பில்லியன் டாலர் என்று இந்த நிறுவனம் கொடுத்த கோட்டேஷன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதையடுத்து, தனியார் நிறுவனம் வைத்திருந்த ராக்கெட், மற்றும் கார்கோ கேப்சியூல், நாசாவின் சோதனைகளுக்கு உள்ளானது. அவை சரியாக இயங்குகின்றன என நாசா உறுதி செய்த பின்னரே, சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு பொருட்களை கொண்டுசெல்ல இந்த ராக்கெட்டுகள் அனுமதிக்கப்பட்டன.


தற்போது, வெடித்துச் சிதறிய ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட கார்கோ கேப்சியூலில், 400 கிலோ உணவுப் பொருட்களும், உடைகளும் உள்ளன. இந்த கார்கோ கேப்சியூலில் ஒரு ஃபிரீஸர் உள்ளது. சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனில் பணி புரிபவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் அந்த ஃபிரீஸரில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன், குறிப்பிட்ட ஃபிரீஸரில் காலி இடம் இருந்ததால், சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷனில் பணி புரிபவர்களுக்கு வழமைக்கு மாறாக, ட்ரீட் ஒன்றும் லோட் செய்யப்பட்டிருந்தது. அந்த ட்ரீட், chocolate vanilla swirl ice cream!

தற்போது, ராக்கெட், கார்கோ கேப்சியூல், ஐஸ்கிரீம் அனைத்தும் அட்லான்டிக் சமுத்திரத்துக்குள் வீழ்ந்து விட்டன!













No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!