Tuesday, October 9, 2012

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒன்றரை மணிநேர ஓய்வு

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒன்றரை மணிநேர ஓய்வு






திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இரவு 10 மணிக்குள் ஏகாந்த சேவை (பெருமாளுக்கு ஓய்வு தரும் நேரம்) நடப்பது வழக்கமாக இருந்தது. சாதாரண நாட்களில் இரவு 10.30 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறும். ஆனால் தற்போது பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் ஒருசில நாட்களில் அதிகாலை 2.40 மணிக்கு ஏகாந்த சேவை நடந்துள்ளது.

இடைவேளை இல்லாமல் 22 மணி நேரத்துக்கு மேலாக சுவாமிக்கு தூக்கமில்லாத வண்ணம் வைகாசன ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக ஆகம பண்டிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் தொல்லியல் துறை நிபுணர்களும் மூலவர் சன்னதியில் தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருப்பதால், அதன் வெப்பமும் அதிகரிக்க கூடும் என எச்சரித்தனர். 

இதனால் ஏழுமலையானுக்கு சற்று ஓய்வு கொடுக்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏகாந்த சேவை நள்ளிரவு 1.30 மணிக்குள் நடத்த வேண்டும். வைகாசன ஆகம விதிகளின்படி குலசேகர படி அருகே உள்ள சைன மண்டபத்தில் சுவாமிக்கு ஏகாந்த சேவைக்காக தங்க ஊஞ்சலில் வெள்ளி கொலுசு போடப்பட்ட பட்டு தலையணையில் வைத்து வெங்கமாம்பா வம்சா வழியினரின் முத்தியால ஆரத்தி எடுத்து 2 விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு மூலவரின் அருகே உள்ள அகண்ட தீபத்தை அணைக்க வேண்டும்.

பின்னர் தங்க கதவு மூடப்பட்டு கருட மண்டபம் அருகே செனாய் மேளம் வாசிக்கப்பட்டு, சுவாமிக்கு அர்ச்சகர்கள் பூஜை செய்து பால், பழங்கள் மற்றும் நெய் வேத்தியங்கள், கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். பின்னர் அர்ச்சகர்கள் சாமி பாதத்துக்கு நமஸ்காரம் செய்து, போக சீனிவாச மூர்த்தியை பட்டு மெத்தையில் வைத்து அன்னமாச்சாரிய வம்சாவளியினர் ÔÔலாலி பரமானந்தா, லாலி கோவிந்தாÕÕ என தாலாட்டு பாடலை பக்தியுடன் பாடி தூங்க வைப்பார்கள்.

வெங்கமாம்பா ஆரத்தியை மூலவருக்கு காண்பித்து, தங்க கதவுகள் மூடப்படும். மூலவர் சன்னதியில் அதிகாலை 1.30 மணி முதல் 3 மணிவரை அகண்ட தீபம் அணைக்கப்படும்.  அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவைக்கு பிறகு தீபம் ஏற்றப்பட்டு ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.நேற்று அதிகாலை சுப்ரபாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!