Tuesday, October 9, 2012

அமெரிக்காவில் நூதன போட்டி : மனைவியை சுமந்து ஓட்டம் பின்லாந்து தம்பதி வெற்றி

அமெரிக்காவில் நூதன போட்டி : மனைவியை சுமந்து ஓட்டம் பின்லாந்து தம்பதி வெற்றி




அமெரிக்காவில் மனைவியை சுமந்து கொண்டு ஓடும் போட்டியில், பின்லாந்தை சேர்ந்த தம்பதி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. வட அமெரிக்க மனைவியை சுமந்து ஓடும் போட்டி, கடந்த சனிக்கிழமை மைன்ஸ் நதிக்கரையோரம் நடந்தது. இதில் பல நாடுகளை சேர்ந்த தம்பதிகள்  பங்கேற்றனர். ஓட்டப் பந்தயத்தின் போது மனைவியை முதுகில் சுமந்து ஓட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் நடுவில் தடை தாண்டுதல், சேற்று  மண்ணில் ஓடுதல் போன்ற பல நிலைகள் அமைக்கப்பட்டன. போட்டி தொடங்கியதும் மனைவிகளை சுமந்து கொண்டு ஓடினர். மொத்தம் 253.5 மீட்டர் தூரம் ஓட வேண்டும்.

மனைவியின் குறைந்தபட்ச எடை 49 கிலோ இருக்க வேண்டும், இன்சூரன்ஸ் செய்து கொள்ள வேண்டும் போன்ற பல கடும் விதிமுறைகள் இந்த போட்டியில் இருந்தன. அதன்படி 50 ஜோடிகள் கட்டணம் செலுத்தி போட்டிக்கு வந்தனர். போட்டியின் முடிவில், பின்லாந்து ஹெல்சின்கி நகரை சேர்ந்த டைஸ்டோ  மிட்டினன் - கிறிஸ்டினா ஹபானன் ஜோடி முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றது. குறிப்பிட்ட இலக்கை இந்த ஜோடி 52.58 வினாடிகளில் கடந்து முதலிடம்  பெற்றது. வெற்றி பெற்ற ஜோடிக்கு பரிசாக, மனைவியின் எடைக்கு எடை பீர் வழங்கப்பட்டது. அத்துடன், 530 டாலர் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!