Monday, October 7, 2013

70.5 லட்சம் லிட்டர் பீர் குடித்த குடிமகன்கள்… நிறைவடைந்த பீர் திருவிழா

70.5 லட்சம் லிட்டர் பீர் குடித்த குடிமகன்கள்… நிறைவடைந்த பீர் திருவிழா 




ஜெர்மனியில் நடைபெற்ற பாரம்பரியம் மிக்க பீர் திருவிழா நேற்றோடு நிறைவடைந்துவிட்டது. இந்த ஆண்டு 70.5 லட்சம் பீர் குடித்து தீர்த்துள்ளனராம். ஜெர்மனி நாட்டில் மியூனிச் நகரில் பீர் திருவிழா கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. 

உலகில் உள்ள எல்லா வகை பீர்களையும் ருசிக்க விரும்புபவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரும் இந்த விழாவில் கலந்து கொண்டு பீரை ருசிப்பர். இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. விழாவின்போது எல்லா வகை பீர் பானங்களும் தாராளமாக வினியோகம் செய்யப்படும். 

இளவரசர் திருமணம் 

கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து இளவரசர் லுத்விக் என்பவருக்கு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டு அவரது திருமண நாளை கொண்டாட இந்த விழா நடந்தது. பெரிய பீர் பீப்பாயில் பீர் நுரைத்து தள்ளும் காட்சி அப்போது இடம் பெற்றது. குதிரைப் பந்தயமும் நடத்தது. பின்னர் விவசாய கண்காட்சியும் இந்த விழாவில் சேர்ந்தது. கடந்த 1960 முதல் குதிரைப் பந்தயம் ரத்தானது. இந்த ஆண்டு, 200வது ஆண்டு விழா கொண்டாடப்படுவதால் மீண்டும் குதிரைப் பந்தயம் நடந்தது.


சர்வதேச திருவிழா 

உலகில் பல ஆண்டுகள் தொடர்ந்து, நீண்ட நாட்கள் நடக்கும் விழா இது என்ற சாதனையும் படைத்துள்ளது. முதலில் ஜெர்மானியர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவில், பின்னர் ஐரோப்பாவைச் சேர்ந்த பல நாட்டு மக்கள் கலந்து கொண்டனர். இப்போது இந்த விழா சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளதால், பல நாட்டு மக்களும் வித, விதமான பீரை ருசிக்க ஜெர்மனியில் குவிகின்றனர்.

செப்டம்பர் டூ அக்டோபர் 

அக்டோபர்பெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த பீர் திருவிழா மியூனிச்சில் ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு பாரம்பரிய விழாவாகும். 16 நாட்கள் இது நடைபெறும். செப்டம்பர் 23ம் தேதி வழக்கமாக இது தொடங்கும். அக்டோபர் முதல் வாரத்தில் முடிவடையும்.


உற்சாகத்திருவிழா 

பீர் குடிப்பது, ரோலர்காஸ்டர் உள்ளிட்டவற்றில் ஏறி உல்லாசமாக விளையாடுவது என்று இங்கு வரும் மக்கள் 16 நாட்களும் தடபுடலான உற்சாகத்தில் மிதப்பார்கள். பவேரிய கலாச்சாரத்தின் ஒரு முக்கியப் பகுதிதான் இந்த விழா. 1810ம் ஆண்டுமுதல் இந்த விழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

6.9 லட்சம் பேர் 

அந்த ஆண்டு பீர் திருவிழாவில் 6.9 லட்சம் மக்கள் பங்கேற்றதாக கூறுகிறது புள்ளிவிபரம். பெரும்பாலும் சொந்த நாட்டு குடிமகன்கள் தானாம். 20 சதவிகிதம் பேர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாம்.


70.5 லட்சம் லிட்டர் பீர் 

இந்த ஆண்டு திருவிழாவில் சுமார் 70.5 லட்சம் லிட்டர் பீர் விற்பனையாகியுள்ளதாம்.

ரோஸ்ட் சிக்கன் 

பீர் குடிப்பது மட்டுமல்லாது 509,000 சிக்கன் ரோஸ்ட், 59000 பன்றிக்கறி, என விதவிதமான உணவுகளும் லட்சக்கணக்கில் விற்றுத்தீர்ந்துள்ளன.

201 வழக்கு பதிவு 

திருவிழா என்றால் பிரச்சினை இல்லாமலா? பீர் திருவிழாவிலும் முதல்நாளிலேயே 201 வழக்குகளை பதிவு செய்யப்பட்டதாக ஜெர்மன் நாளேடு ஒன்று தெரிவிக்கிறது.

பீர் திருவிழா நிறைவு 

இந்த ஆண்டு திருவிழா தற்போது நிறைவடைந்துவிட்டது. துப்பாக்கியால் குண்டு முழங்க அதனை அறிவித்தனர். இனி பீர் பிரியர்கள் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

சில ஆண்டுகள் ரத்து 

காலரா நோய் பரவிய சமயத்திலும் உலகப் போர்களின் போதும் சில ஆண்டுகள் இந்த விழா நடக்கவில்லை. இவ்வாறு 24 ஆண்டுகள் இந்த விழா நடக்கவில்லை. மற்ற எல்லா ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்றது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!