Wednesday, March 27, 2013

பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு மேலும் ஓராண்டு தடை

பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு மேலும் ஓராண்டு தடை


பருப்பு வகைகள் தேவை உள்நாட்டிலேயே அதிகமாக இருந்ததால், அவற்றை ஏற்றுமதி செய்ய முதன்முதலில் 2006ம் ஆண்டில் 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், அவ்வப்போது தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.

கடைசியாக இம்மாதம் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் காபுலி கொண்டைக் கடலை, இயற்கை  உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட பருப்பு மற்றும் பயறு வகைகளை ஆண்டுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!