Wednesday, March 27, 2013

சேர்ந்தவுடனேயே கோடீஸ்வரன் ஆனான் யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை

சேர்ந்தவுடனேயே கோடீஸ்வரன் ஆனான் யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை



லண்டனை சேர்ந்த 17 வயது சிறுவன் நிக் டிஅலாய்சியோ, பள்ளியில் படித்து வருகிறான். இவனது தந்தை நிதிநிலைமை ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது தாய் வக்கீலாக பணியாற்றுகிறார். இவர்களுக்கும் கம்ப்யூட்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், டிஅலாய்சியோ கம்ப்யூட்டர் புலியாக இருக்கிறான். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிப்பது குறித்து 12 வயதிலேயே ஆராய ஆரம்பித்து விட்டான். இப்போது, ‘சம்ளி’ என்று புதிய அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளான்.

‘சம்ளி’யின் விசேஷம், ஒரு பெரிய நாவலை கூட, ஸ்மார்ட் போனில் படித்து விடக்கூடிய அளவுக்கு சுருக்கி தருவதுதான். இதுகுறித்து கடந்த நவம்பர் மாதம், இணையதளத்தில் டிஅலாய்சியஸ் செய்தி வெளியிட்டான். இதுதொடர்பாக யாகூ உள்ளிட்ட பல்வேறு இணையதள நிறுவனங்களிடமும் அவன் பேசினான். இதில் ‘சம்ளி’ அப்ளிகேஷனை வாங்கிக் கொள்ள யாகூ நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இதன்படி, லண்டனில் உள்ள யாகூ நிறுவனத்தில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் பல கோடி ரூபாய் கொடுத்து ‘சம்ளி’யை பயன்படுத்தும் உரிமையை யாகூ பெற்றுகொண்டது. இதற்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 3 கோடி அமெரிக்க டாலர்(சுமார் ரூ.162 கோடி) கொடுக்கப்பட்டுள்ளதாக யாகூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், டிஅலாய்சியோவுக்கு யாகூ நிறுவனத்திலேயே பல லட்சம் சம்பளத்தில் வேலையும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஅலாய்சியஸ் கூறுகையில், ‘‘15 வயதிலேயே என்னுடைய சம்ளியை கண்டுபிடித்து விட்டேன். அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தேன். இதுதொடர்பாக பல நிறுவனங்களிடம் பேசினேன். யாகூவைதான் இறுதியாக நான் தேர்ந்தெடுத்தேன். என்னுடைய பள்ளிப்படிப்பு முடிய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் யாகூ அலுவலகத்துக்கு எந்த நேரத்தில் சென்று வேலை பார்ப்பது என்பது குறித்து திட்டமிட்டு வருகிறேன்’’ என்றான்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!