Wednesday, September 25, 2013

இந்தியாவிலேயே முதன்முறையாக தயாராகிறது திருப்பதி கோயிலுக்கு 24 கோடியில் தங்க ரதம்

இந்தியாவிலேயே முதன்முறையாக தயாராகிறது திருப்பதி கோயிலுக்கு 24 கோடியில் தங்க ரதம்




இந்தியாவிலேயே முதன்முறையாக திருப்பதி கோயிலில் 24 கோடி செலவில் 32 அடி உயரமுள்ள தங்க ரதம் தயாராகிறது.திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு தங்க ரதம் தயார் செய்யும் பணிகளை, தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ நேற்று ஆய்வு செய் தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பதி கோயிலுக்காக 32 அடி உயரத்தில் தங்க ரதம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. 27ம் தேதிக்குள் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். 30ம் தேதி காலை சோதனை ஓட்டம் நடத்தப்படும். வரும் அக்டோபர் 10ம் தேதி பிரம்மோற்சவமும், மாலை 5 மணிக்கு தங்க ரத ஊர்வலமும் நடக்கிறது. தமிழகத்திலுள்ள மதுரை, சுவாமி மலை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தங்க ரதம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே 32 அடியில் தங்க ரதம் செய்யப்படுவது, திருப்பதி கோயிலில் மட்டும்தான். இதற்கான தங்கம் பக்தர்களிடம் நன்கொடையாக பெறாமல், தேவஸ்தான கருவூலத்திலிருந்து பெறப் பட்டு செய்யப்பட்டுள் ளது. 74 கிலோ தங்கம், 2,900 கிலோ காப்பர், 25 டன் மரப்பலகைகளுடன் 24 கோடியில் தங்க ரதம் தயாராகி வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!