Wednesday, September 25, 2013

200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வானில் தோன்றும் ஐசான் வால் நட்சத்திரம் நவம்பரில் பார்க்கலாம்

200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வானில் தோன்றும் ஐசான் வால் நட்சத்திரம் நவம்பரில் பார்க்கலாம்




ஐசான் என்ற புதிய வால்நட்சத்திரம் வரும் நவம்பரில் சூரிய குடும்பத்தில் நுழைகிறது. இதன் வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ள னர். மிகவும் பிரகாசமான இந்த நட்சத்திரம், 200 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நம் கண்களுக்கு தெரிய இருக்கிறது. நவம்பர் 2வது வாரத்தில் இந்த வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும்.

தொடர்ந்து, வால்நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் நுழைய முயற்சிக்கும்போது சூரியனை உரசிச்செல்வது போல் தோன்றும். அப்போது, வால்நட்சத்திரம் சிதறக்கூடிய வாய்ப்பு உள்ளது. சிதறாமல், நுழைந்து விட்டால், இந்த நு£ற்றாண்டில் பிரகாசமாக தெரியும் வால் நட்சத்திரம் இதுவாகத்தான் இருக்கும். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=48640#sthash.C8o1nqub.dpuf

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!