Friday, August 23, 2013

அதிகம் படித்தவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்குமாம்!

அதிகம் படித்தவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்குமாம்!


கல்வித் தகுதி அதிகம் உடைய நபர்கள், மனதளவிலும், உடலளவிலும்அதிகம் பாதிக்கப்படுவதாக,ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர். பணிச்சூழலில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கும் படித்தவர்கள் தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான்

மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஒரு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்த பாதிப்பு 

மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உறவில் விரிசல் 

மன அழுத்தத்தினால் எற்படும் பிரச்சினைகள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும் நோய்களின் பிறப்பிடமாக உள்ள மனஅழுத்தம் மண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதிக படிப்பு ஆபத்து 

அதிகம் படிக்கும் நபர்கள், மனதளவிலும், உடலளவிலும்அதிகம் பாதிக்கப்படுவதாக,பெல்ஜியத்தைச் சேர்ந்தகென்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அறிக்கைவெளியிட்டு உள்ளனர்.அதிக கல்வித் தகுதிஉடைய, 21 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, 17ஆயிரம் பணியாளர்களிடம்நடத்திய ஆய்வில், பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திறமைக்கேற்ற வேலை 

உலகின் பல நாடுகளிலும் தற்கால இளைஞர்கள் அதிகம் படித்தவர்களாய்இருக்கிறார்கள். எனினும்,அவர்களின் திறமைக்கேற்ற வேலை கிடைப்பதுஇல்லை. தங்கள் பணியில் முழு திறமையையும் வெளிப்படுத்த முடியாத சூழல்ஏற்படுவதால், ஒரு விதமன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர்.

பாதிக்கும் உடல்நிலை 

வாழ்க்கையில் தாங்கள் கற்ற அனைத்தையும் வெளிப்படுத்த முடியவில்லையே என்ற உணர்வு அவர்களை உறுத்துகிறது. இதனால், மன இறுக்கம் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் உடல் நிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஆய்வில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், மனதளவிலும், உடலளவிலும்ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். Show Thumbnail

அதிக மனஇறுக்கம் 

அதிக திறமை மற்றும்உயர்ந்த பட்டங்களைப்பெற்ற நபர்கள், குறுகியகாலத்திற்குள் தங்கள்தகுதிக்கேற்ற வேலையில்சேராவிடில், அதிக மனஇறுக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிப்புக்கும்ஆளாகின்றனர். எனவே,அதிகம் படிக்கும் நபர்களை, மன இறுக்க நோய்அதிக அளவில் பாதிக்கிறது.

குறைந்த சம்பளம் 

அதிகம் படித்த நபர்கள்,ஆரம்பத்தில் குறைந்த சம்பளம் மற்றும் தங்களின்திறமைக்குக் குறைவானவேலையில் சேருகின்றனர். தங்களை விட திறமைமற்றும் தகுதி குறைந்த சீனியர்களின் கீழ் வேலைபார்க்க வேண்டியசூழ்நிலையாலும், சீனியர்களின் தாழ்வு மனப்பான்மையால்,

ஆபத்தாகும் கல்வித்தகுதி 

இதற்கிடையில் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த மக்களும், கல்விக்குமுக்கியத்துவம் தந்து வருவதால், போட்டி உலகில்தங்கள் கல்வித் தகுதியைமேலும் மேலும் உயர்த்திக்கொள்வதற்காக, பலரும்அதிகம் படிக்கத் துவங்கி உள்ளனர் அதுவே இன்றைக்கு ஆபத்தாகியுள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!